பக்கம்:வைணவ உரைவளம்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 50ገ யில் உள்ளது என்பது இதன் பொருள் என்பதை இராமா நுசர் நன்கு அறிந்தவர். இதனைக் கேட்டவுடன் அவர் "இப்பகுதி மொழியாலன்றோ அருளிச் செய்துள்ளார் ஆழ்வார்!’ என்று பாசுரத்தில் மிகவும் ஈடுபட்டதாக வரலாறு ஒன்று உண்டு. 238 'மல்லிகை கமழ்'29 (அவதாரிகை) : இது மகள் பாசுரம். தலைவி மாலைப்பொழுது கண்டு தன் ஆற்றாமையை இரங்கிக் கூறுவதாக அமைந்த திருவாய்மொழி; நம் முடைய முதலிகள் இத் திருவாய்மொழியை மாலைப் பூசல்" என்று வழங்குவர்-இத் திருவாய் மொழியின் பல சுருதிப் பாசுரத்தில். மாலைப் பூசல் வரும் தொடரை நோக்கி, மேல் வரும் திருவாய்மொழி39 யொன்றிற்கு (வேய் மருதோ ளிணை மெலியு மாலோ - என்று தொடங்குவது) காலைப் பூசல் என்று நம் ஆசாரியர்கள் வழங்கும் திருநாமம். கண்ணபிரான் விடியற் காலத்தில் பசு மேய்க்கப் போனா னாக அதிசங்கை3' பண்ணி அவன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவனவான பதார்த்தங் கள் நலியாகின்றன என்று முறையிடுவது காலைப் பூசலான அத் திருவாய்மொழியில். மாலைப் பூசலான இத் திருவாய்மொழியிலோ வென்னில் காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடல் பூச்சூடி" வருகின்ற தாமோதரன் மாலைப் பொழுதே திருவாய்ப்பாடியேறத் திரும்பி வரும்போது சில நாட்களில் பசுக்களை யெல்லாம் பின்னே வரவிட்டுத் தான் முன்னே 29. திருவாய், 9.9 د .10.g@ .30 31. அதிசங்கை-மிகுந்த ஐயம் 32. பெரியாழ். திரு. 3.3:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/530&oldid=921358" இலிருந்து மீள்விக்கப்பட்டது