பக்கம்:வைணவ உரைவளம்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 வைணவ உரைவளம் குழலூதிக் கொண்டு வருவான்; சில நாட்களில் பசுக்களை யெல்லாம் முன்னே போகவிட்டுத் தான் பின்னே வருவது முண்டு; அப்படி வருகின்ற நாளில் அப்பெருமானைப் பசுக் களின் முற்கொழுந்தில் காணாமல் திருவாய்ப் பாடியில் பெண்கள் பட்ட பாட்டை ஆழ்வார் தாம் ஏறிட்டுக் கொண்டு பேசுகிறதாக அமைந்தது இத் திருவாய்மொழி. இத் திருவாய்மொழி மாலைப் பூசல் என்கைக்குச் சம்வாதம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். ஒருநாள் நம்பி திருவரங்க நாராயண தாசர்" என்பார் ஒருவர் என் பக்கலில்34 திருவாய்மொழி கேட்டு, பெற்றி35 பக்கல் செல்ல, பெற்றி "இன்று பிள்ளைபாடு விநோதம் ஏன்?" என்று கேட்டார். அதற்குத் தாசர், அறுக்கும் வினை" என்ற திருவாய் மொழியைச் சாற்றினோம் என்று மறுமொழி தர, பெற்றி 'காளை மல்லிகை கமழ் தென்றலும் மாலைப் பூசலும் என்னாய்' என்று பணித்தாராம், 239 கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல்சூழ் கிடங்கின் புடை வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் உள்ளி,நா ளுந்தொழு தெழுமினோ தொண்டரே!' (கண் அவிழும்-தேன் ஒழுகுகின்ற; மலர் இட்டுபூக்களைப் பரிமாறி, நள்ளி-பெண் நண்டு: வயல்-கழனி, கிடங்கு-அகழ்; வெள்ளிசுக்கிரன்; உள்ளி-சிந்தித்து: நாளும்நாடோறும்; தொழுது-வணங்கி) 33. இவர் நம்பிள்ளையின் மாணாக்கர். 34. என் பக்கலில்-நம்பிள்ளைபக் கலில். 35. பெற்றி--இவர் நஞ்சீயருடைய மாணாக்கர், 36. திருவாய். 9.10.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/531&oldid=921359" இலிருந்து மீள்விக்கப்பட்டது