பக்கம்:வைணவ உரைவளம்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 509 திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசிக்கும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், *அடியிர்காள்! நீங்கள், பெண் நண்டுகள் சேர்ந்திருக்கின்ற வயல்கள் சூழ்ந்த அகழியின் அருகில் சுக்கிர மண்டலம் வரையில் உயர்ந்து பொருந்தியிருக்கின்ற மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரம் என்னும் திவ்விய தேசத்தை நாள் தோறும் மனத்தால் நினைத்து, தேனோடு மலர்கின்ற பூக்களைக் கொண்டு அருச்சித்து வணங்கிக் கைகூப்பித் தொழுது பிறவிப் பெருங்கடலில் நின்றும் கரை ஏறுங்கள்' என்கின்றார். கள் அவிழும்...இறைஞ்சுமின் செவ்விப் பூவைக் கொண்டு அருச்சித்து அடிவணங்குங்கோள். பக்தியை யுடையவர்கள் செவ்விப்பூவைத் தேடுவார்கள் அன்றோ? 'கள்ளார் துழாயும் கணவலரும்' 3" என்கின்றபடியே பூக்களின் இனத்தைச் சார்ந்தவை யாவும் அமையும் அன்றோ, அவன் படியைப் பார்த்தால். ஆக, பொருள் களின் உயர்வு தாழ்வுகளை நோக்கான், அடைகின்றவ னுடைய அன்பினையே பார்க் குமத்தனை.

  • அன்பினையே பார்க்கும் என்பதற்கு ஐதிகம் காட்டுவர் ஈட்டாசிரியர். பூரீ புருஷோத்தமமுடையா னுக்கு 3' அரசபுத்திரன் சாத்தின செண்பகப் பூவாரத்தை நினைப்பது. இதன் விவரம்: பூ புருஷோத்தமமுடையான் செண்பகம் உகத்து அணிவர்; அரசகுமாரர்கள் சிலர் செண் பகம் கொண்டு சாத்துவதற்குத் தேடி, கடை. களில் சென்று பார்க்க, ஒரு பூ இருக்கக் கண்டு அப்பூவுக்கு ஒருவர்க் கொருவர் செருக்காலே விலையை மிக ஏற்ற, அவர்களிலே ஒருவன் நினைக் கவொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டுவந்து சாத்தினான;

T37. பெரி.திரு. 11.7:6 38. பூ புருஷோத்தமம்-ஒரு திவ்வியதேசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/532&oldid=921360" இலிருந்து மீள்விக்கப்பட்டது