பக்கம்:வைணவ உரைவளம்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 51 | என்பதும் ஒன்று. இது பராசரபட்டர் அருளிச் செய்த தாகும் என்பதை யாவரும் அறிவர். இதில் திருவாய்மொழி ஆயிரமும் பெரிய பெருமாள்மீதாகும் என்று சொல்லப் பெற்றுள்ளது, இஃது எப்படிப் பொருந்தும்? திருவாய் மொழியாயிரத்தில் பலபல திவ்விய தேசங்கனன்றோ அநுபவிக்கப் பெற்றுள்ளன? அவற்றுள், ' கங்குலும் பகலும் 2 என்ற திருவாய்மொழியொன்றே அரங்கநாதன் விஷயமாக காணாநிற்க, ஆயிரமும் மதிரளங்கர் வண்புகழ் மேலான்ற தென' எப்படிச் சொல்லுகின்றார்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம். அதற்கு மறுமொழி பகர்ந்தவர்கள் ' கங்கு லும் பகலும்' என்ற பதிகத்தின் முடிவில், முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை ஆயிரத் திப்பத்தும் என்கையாலே திருவாய்மொழி ஆயிரமும் அரங்கநாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப்பட்டது; அதிலிருந்து சில திவ்விய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது; ஆனது பற்றியே, 'திருவேங் கடத்துக் கிவைபத்தும்'3 என்றும், 'திருமோகூர்க்கு ஈந்த பத்திவை'4 என்றும் "இவை பத்தும் திருக்குறுங்குடி அதன்மேல் என்றும் ஆழ்வாரே அருளிச்செய்துள்ளார்' என்றார்க ளாம். 2. திருவாய். 7. 2. 3. திருவாய். 6. 10:11. 4. டிெ. 10. 1: 11 5. டிெ 5. 3: 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/534&oldid=921362" இலிருந்து மீள்விக்கப்பட்டது