பக்கம்:வைணவ உரைவளம்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 i 4 வைணவ உரைவளம் இன்று-இன்றே; புகுதிராகில்-சென்று அடை வீர்களாகில்; எழுமையும்-ஏழேழ் பிறப்பும்; ஏதம்- சம்சாரதோஷம்; சாரா-சேராது; குன்றுநேர்-மலைபோன்ற; மாடம் மாடேமாடங்களின் அருகே, குருந்துசேர்-குருந்த மரங்களோடு; பொழில்-சோலை; நாமம்பெயர்; உள்ளுவார்க்கு- அது சந்திப்பவர் கட்கு; உம்பர் ஊர்-பரமபதம், ! இது நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். திருவனந்தபுரம் என்ற திருப்பதிமீது மங்களாசாசனம் பெற்ற திருவாய்மொழியில் உள்ளது. இதில் ஆழ்வார், :இன்றே சென்று அடைவீர்களாயின், எப்பொழுதும் ஒரு துன்பமும் உங்களை வந்தடையாது; மலைகளை யொத்த மாளிகைகளின் அருகில் குருந்த மரங்களும் சேர்ந் திருக்கின்ற செருந்தி மரங்களும் புன்னை மரங்களும் மணத் தோடு மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானின் திருப்பெயர்கள் ஒவ்வொன்றுமே ஆயிரம் திருப்பெயர்கள் கொடுக்கின்ற பலனைக் கொடுப் பனவாம்; ஆதலால், இத்தனமையினை நினைப்பவர்கட்குக் கிடைப்பது பரமபதமேயாம்' என்கின்றார். குன்றுநேர் மாடம்": இதில் அமைந்த ஐதிகம். ஒரு சமயம் பிள்ளை கறையூர் அரையரும் பட்டரும் திருக் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தனர். வேறுபக்தர்கள் எதனையும் கவனியாது மிக விரைவாக வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த இருவர் மட்டிலும் திருமாளிகை களையும் திருக்கோபுரங்களையும் பிறவற்றையும், பருகு வன்ன அருகாநோக்கமொடு பார்த்துக் கொண்டுவந்த நஞ்சியர் அல்லாதார்க்கும் இவர்கட்கும் செயல் ஒத்திருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என்? என்று இருந்தேன்' என்று அருளிச் செய்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/537&oldid=921366" இலிருந்து மீள்விக்கப்பட்டது