பக்கம்:வைணவ உரைவளம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 வைணவ உரைவனம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ கமர்கள் உள்ளீர் நாமுமக் கறியச் சொன்னோம்.4 (கடுவினை-கொடிய பாவம்; களைய-போக்க: எழில்அணி-அழகு அணிந்த, இடவகைஇருப்பிடமாக நமர்கள் உள்ளீர்-நம்மோடு சம்பந்தம் பெற்றவர்களா யிருப்பவர்களே! நடமின்-நடவுங்கள்: அறிய-தெரியl திருவனந்தபுரம் சேர்ந்தால் பரம பதத்தில் செய்வது போலத் தொண்டு செய்யலாம் என்று கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார். "மன் மதனுக்குத் தந்தையாகிய கிருஷ்ணன் தனக்கு வசிக்கும் இடமாகக் கொண்டது, அழகு பொருந்திய திருவனந்த புரம் என்பர்; நம்முடைய பந்துக்களாக உள்ளவர்களே, நீங்கள் அறியும்படி நாம் சொன்னோம்; அங்குப் படத்தை யுடைய ஆதிசேஷ சயனத்திலே அறிதுயில் செய்கிறவ னுடைய திருவடிகளைத் தரிசிப்பதற்கு நடவுங்கள்; நடந் தால், கொடிய வினைகளை எல்லாம் போக்கலாம்' என்கின்றார். "படமுடை அரவில்...சொன்னோம் : இந்த அடிகளில் அதுசந்திக்கும் ஒர் ஐதிகம் உண்டு; ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி யோக ரகஸ் யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!" என்று சாதித்திருந்தபடியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று அடியே னுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்யவேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழும் 14. திருவாய், 10.2:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/541&oldid=921371" இலிருந்து மீள்விக்கப்பட்டது