பக்கம்:வைணவ உரைவளம்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 வைணவ உரை வளம் மாடு கட்டும் இடம்; விரும்பி-ஆதரித்து' போதி-போகா நின்றாய்; பழுத்த-பரி பக்குவமாய்; பணிமொழி - தாழ்ந்த வார்த்தை! ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், கோவிந்தா! அடிச்சி யோமாகிய எங்களுடைய தனிமையையும் துணையாகிய உன்னைப் பிரிந்தவர்களுடைய துன்பத்தையும் நினைக்கின்றிலை: தொழுவத்திலே உள்ள உன்னுடைய பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்து போகட்டு அப்பசுக்களை மேய்ப்பதற் காகப் போகின்றாய்; பக்குவமான சிறந்த அமுதினுடைய இனிய காற்றின் வெள்ளமானது பாவியேனாகிய என்னு டைய மனத் கின் இடந்தோறும் புகுந்து அழுத்த, நினது சிவந்த மேனி போன்ற திருவாயில் நின்றும் வருகின்ற வஞ்சகமான தாழ்ந்த வார்த்தைகளை நினையுந்தோறும் உயிரானது வேகின்றது' என்கின்றார். 'கின்தொழுத்தனில்...போதி : ஒரிடத்திலே வளைத்து வைத்த பசுக்களையோ காக்கவாவது? உன் கைக்குள் அகப் பட்டாரைக் காக்கலாகாதோ? இவர்களை அணைத்து விட்டுப் பின்னை அன்றோ பசு மேய்க்கப் போவது? பசுக்களையே என்ற ஏகாரத்தால் நீ போனால் பிரிவுக்கு ஆற்றாமைப் பட அறியாதோரையோ நீ ஆதரிப்பது? என்பதனைத் தெரிவித்தபடி. விரும்பி-இவர்களை அணைத்துக் கட்டிக் கொண்டு கிடந்தாலும் கண்ணி என்பது, கன்றுகள் விட்டுக்கொடு போகா நின்றது என்ப தாய் வாய் வெருவுதது அவற்றையே ஆயிற்று. இங்கு இருக்கும்போது நெஞ்சு அங்கே ஆயிற்று. இங்குள்ளது பொய் ஆலிங்கனமே. முடிவில் எல்லைக்குச் சம்வாதம் காட்டுகின்றார். பிள்ளையமுதனார் ஒரு பகவின் காலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/545&oldid=921375" இலிருந்து மீள்விக்கப்பட்டது