பக்கம்:வைணவ உரைவளம்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 53 | பெற்றேன்; மனை வாழ்க்கையுள்-சம்சாரத் தில்; மாயை-அஞ்ஞானம்: மடித்தேன்அழித்தேன்; எம்பெருமான் காரணமின்றியே அருளி மகிழும். திறத்தைப் பேசும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், கொடிகள் கட்டிய கோபுரங்களும் மாடங்களும் சூழ்ந்த திருப்பேர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானது திருவடிகளை யடைவது எனக்கு எளிதாக இருந்தவகை என்னே! திருவடி களைத் துணையாகப் பிடித்தேன்; பிறவியினை அழித்தேன்; நோயினை அடையேன், மனைவாழ்க்கையுள் நிற்பதற்குக் காரணமான மூலப்பகுதியை அழித்தேன்' என்கின்றார்.

  • பிடித்தேன் தலை மேலதாளிணைகள்' என்று.அவன் திருவடிகளைத் தலைமேலே கொண்டுவந்து வைக்கையாலே அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். பிறவி கெடுத்தேன்’ பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன்.3% கானோ ஒருங்கிற்றும் கண்டிலன்'35 என்கின்றபடியே, எங்கே போயிற்றுக் கண்டிலன். பிணிசாரேன் பிறவிபுக்க இடத்தே புகக் கூடிய பிணியைக் கிட்டேன். மனை வாழ்க் கையுள் நிற்பது ஓர் மாயையை மடித்தேன்" இவ்வுலக வாழ்க் கையிலே நிற்கைக்கு அடியான மாயையை:(மூலப்பகுதியை) திரிய விடுவித்தேன், தொடருகின்ற பாம்பைத் திரிய விடுவிப்பாரைப் போலே.'

33. திருவாய் 10, 6:6 34. தூலசரீரத்தின் நாசத்தைச் சொல்லுகிறது. 35. பெரி. திருவந், 54 36. குக்குமசரீரத்தின் நாசத்தைச் சொல்லியபடி 37. என்றது அருச்சுனன் - கிரீடத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பின்னையும் தொடர்ந்து வருகின்ற நாதக் கணையைக் கண்ணன் நியமனம் தாலே திரிய விட்டார் போலவே என்றபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/554&oldid=921385" இலிருந்து மீள்விக்கப்பட்டது