பக்கம்:வைணவ உரைவளம்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 வைணவு உரைவளம் |ஜோலம்.அழகிய மலர்ப்பாவை-பெரிய பிராட் டியார் அன்பேயோ.அன்பு செய்கின்றவனே: நீலம் வரை.நீலமணி மலை, நிமிர்ந்தது ஒப்ப-எழுந்தது போலே, நிலம்-பூமி: கோடுஎயிறு; உன்னைப் பெற்று-உன்னைப் புக லாகப் பெற்று; போக்குவனோ-நழுவ விடுவேனோ.1 ஆழ்வார் பரமபக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச் செய்வதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம், இதில் ஆழ்வார், அழகிய தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாருக்கு அன்பனாக இருக்குமதனாலே என்னிடத்திலும் அன்புடைய வனாக இருப்பவனே! கரிய நிறத்தையுடைய ஒரு மலை யானது இரண்டு பிறையைக் கவ்விக்கொண்டு புறப் பட்டாற் போன்று, ஒப்பற்ற அழகிய வராகமாகி, பாதா ளத்தில் அழுந்திக் கிடந்த பூமியைத் தந்தத்திலே கொண்டு காப்பாற்றிய எந்தையே! நீல நிறத்தையுடைய கடலைக் கடைந்தவனே! உன்னை அடைந்த பின்பு இனி நழுவ விடுவனோ?' என்கின்றார். கோலம் மலர்ப்.........அன்பேயோ : பிராட்டிறக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீகரிக்கப்பட்ட என் பக்கவில் மிக்க அன் புள்ளவன் ஆனவனே! இதற்கு ஒரு சம்வாதம் காட்டு கின்றார் ஈட்டாசிரியர். பட்டர் தம்முடைய இறுதிக் காலத்தில் அருளிச் செய்தவார்த்தை; பெரிய பிராட்டி யாருக்கு அன்பன் ஆகையாலே அவளால் அங்கீகரிக்கப் பட்ட நமக்கு அன்பனாம் என்று இப்பாசுரத்தை கம் முடையார் துவயத்தின் பொருளோடு அதுசந்திப்பர்கள் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/559&oldid=921390" இலிருந்து மீள்விக்கப்பட்டது