பக்கம்:வைணவ உரைவளம்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பா 255 தமருகக்த தெவ்வுருவம் அவ்வுருவக் தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர்-தமருகக் எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே அவ் வண்ணம் ஆழியான் ஆம். ' (தமர்-அடியார்கள்; உகந்தது-உகக்கப் பட்டது: தானே ஆம்-பரிணாமாமடைவன்; பேர். திரு நாமம், எவ்வண்ணம் சிந்தித்து-எந்த விதமாகவோ அநுசந்தித்து; இமையாது இருத்தல்-ஒயாமல் பாவனை பண்ணிக் கொண்டிருத்தல்; ஆ ழி யா ன்-சக்கரப் படையான்..! இப்பாசுரம் பொய்கையார் அருளிச் செய்தது. அடியார்கள் இறைவனுக்கு அடிமை செய்யும் போது எந்த உருவத்தையும் எந்தத் திருப் பெயரையும் உகந்திருப் பார்களோ அந்த திரு உருவத்தையும் அந்தத் திருநாமத்தை தையுமே அர்ச்சாவதார உருவமுடையவனாய்த் தன்னை அமைத்துக்கொண்டு அவர்களை அடிமை கொள்வான் இறைவன் என்கின்றார் ஆழ்வார். தமர்கள் கல் மண் உலோகங்கள் இவற்றுள் எதனைக் கொண்டு இறைவனு டைய திருமேனியை அமைக்கின்றார்களோ அதனையே இறைவன் தனது ஒப்பற்ற திருமேனியாக ஏற்றுக்கொண்டு அதிலே சந்நிதானம் பண்ணி எழுத்தருளியிருப்பன், 41 முதல் திருவந்-44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/561&oldid=921393" இலிருந்து மீள்விக்கப்பட்டது