பக்கம்:வைணவ உரைவளம்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பா 54." எடுத்துக் காட்டியுள்ளனர். ஆண் பிள்ளைகள் அப்பா விளையாட்டும் பெண் பிள்ளை கன் அம்மா விளை யாட்டும் இருவரும் ஆசிரியர் விளையாட்டும் விளை யாடு வதை நாம் காணத்தான் செய்கின்றோம். கற்பனை யான்றலால் ஊஞ்சல் கப்பலாக மாறிவிடுகின்றது! மரக் கட்டை குதிரையாகி விடுகின்றது! உயிரில்லாதவை உயிருள்ளவைகளாகி விடுகின்றன; பேசுகின்றன! கடை வைப்பதிலும் பள்ளிக் கூடம் வைப்பதிலும் பாலர்கட்கு அதிக ஆசை என்பதை நாம் அடிக்கடிக் காண்கின்றோம். ஒரு சிறுவன் மண்ணில் சில கோடுகளை வரைந்தான்; *இதோ திருக்கோயில் என்றான். இன்னொரு சிறுவன் வேறு இரண்டொரு கோடுகளைக் கீறி இதோ பெரிய திருமண்டபம்’ என்றான். அந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருந்த இராமாநுசரைக் கண்டதும் பிறிதொரு பையன் மேலும் இரண்டொரு கோடுகளைக் கிழித்து, p' யரே, "இதோ உம்முடைய பெருமாள்!" என்று காட்டினான். இராமாநுசர் வந்து பார்த்தார். மற்றொரு சிறுவன், அதோ பெருமாளின் திருவாழி, திருச்சங்கு!" என்று சுட்டிக் காட்டினான். உடனே இராமாநுசர், தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே. என்று சொல்லிக்கொண்டே, அந்தச் சிறுவரின் கீறல்களை நோக்கித் தண்டனிட்டார். இவரது திருவுள்ளம் அந்தக் கீறல்களை உண்மையாகவே எம்பெருமானின் திருமேனி பாகவே கருதி பிரபத்தி பண்ணிவிட்டது. தயர் உகந்தது எப்பேர் மற்று அப்பேர். அருகிலிருந்த இன்னொரு சிறுவன் ஒரு கொட்டாங் குச்சியில் மண்ணை வாரி வைத்துக்கொண்டு சந்நிதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/563&oldid=921395" இலிருந்து மீள்விக்கப்பட்டது