பக்கம்:வைணவ உரைவளம்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-(2) வைணவப் பெரியார்கள் அகளங்க பிரம்மராயன் : கூரத்தாழ்வானின் சீடர். திரு அரங்கம் மதில் நிர்மாணம் செய்தவர் (பாசுரம்-205 235 காண்க). அத்துழாய் : பெரிய நம்பியின் திருமகளார். இராமா நுசர் உந்து மதகளிற் றன் அது சந்திக்கும்போது திருக் கடைக் காப்பு நீக்கிப் பிச்சையிட வந்தபோது pயர் தண்டனிட்டார். (பாசுரம்-6 காண்க). அநுமந்த தாசர் : இராமாநுசருடைய சீடர். இவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இராமாநுசர் திருவாராதனக் கிரமம் உபதேசித்தார் (பாசுரம்-65 காண்க) அப்பன் (குருகைக் காவலப்பன் காண்க) அம்பரீஷன் : நபாகன் புத்திரன். எகாதசி விரதம் அதுட்டித்து முடிவில் அறுபது கோதானம் செய்து துவா தசிபாரணை செய்யவிருக்கையில் துருவாசரி அதிதியாக எழுந்தருளினார். முனிவர் காளிந்தி சென்று தீர்த்தம் ஆடுகையில் அரசன் துவாதசி கடத்தலை எண்ணிப் பயந்த வனாய் சலபானம் செய்தனன். தன் கருமம் முடித்துத் திரும்பிய முனிவர் அரசன் செய்கையறிந்து சினங் கொண்டுத் தம்மை அவமதித்துச் சல பானம் செய்த அரசனைக் கொல்ல எண்ணித் தமது சடையிலொன்றைக் களைந்துக் கோபத்துடன் பூமியில் எறிய, அதினின்றும் ஒரு பூதம் உண்டாகி அரசனை எதிர்த்தது. அரசன் அதை விஷ்ணு சக்கரத்தாற் கொன்றனன். பிறகு சக்கரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/568&oldid=921400" இலிருந்து மீள்விக்கப்பட்டது