பக்கம்:வைணவ உரைவளம்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 வைணவ உரைவளம் யும் அப்பேருள்ள ஒரு காவியத்தையும் செய்தருளினார். இவர் சந்நியாசியாசிரமத்தை மேற்கொண்டு திருவாய், மொழிக்குப் வன்னிராயிரப்படி என்ற உரையை அருளிச்செய் தார். இது. தவிர, திருவிருத்தத்திற்கு ஸ்வாபதேச உரை, இரகசியத்திரய விஷயமாக தத்துவதீபம் என்ற நூல், அதற்கு உரையாக தத்துவப் பிரகாசம் என்ற நூல், இரகசியத் திரய காரிகை என்ற நூல் ஆகியவற்றைச் செய்தவர். (பாசுரம்-75 காண்க.) அனந்தாழ்வான் : இவர் இராமாநுசருடைய சீடர். அவர் நியமனப்படி திருமலையில் கைங்கரியம் செய்தவர். அங்கு ஓர் ஏரியை வெட்டி, அதற்கு இராமாநுசன் புத்தேரி என்ற பெயரை அமைத்து, ஒரு நந்தவனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்து மாலை தொடுத்து திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் மலர்த்தொண்டு செய்துவந்தவர் (பாசுரம்-138, 173, 192, 206 காண்க) ஆச்சான் : கிடாம்பி ஆச்சான் காண்க. ஆச்சான் பிள்ளை : பெரியவாச்சான் பிள்ளை. இவர் நம்பிள்ளையின் சீடர். நம்பிள்ளையின் நியமனத்தினால் திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி' என்ற வியாக்கியானமும், மற்ற மூவாயிரத்துக்கும் வியாக்கி மானமும் செய்தார். "உரை வேந்தர் என்ற புகழ்பெற்றவர். இவர் பிறந்த ஊர் சேங்கநல்லூர் (தஞ்சை மாவட்டம்). ஆண்டாள் : (1) கூரத்தாழ்வான் தேவிகள், (2) உய்யக் கொண்டார் தேவிகள், (3) திருமங்கையாழ்வார் சகோதரி. (4)பெரியாழ்வாரின் திருமகளான கோதா தேவி. (பாசுரம்283 காண்க.) ஆண்டான் : முதலியாண்டான்" காண்க. ஆப்பான் : பட்டர் காலத்து வைணவர் (பாசுரம்-49, 187 காண்க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/570&oldid=921403" இலிருந்து மீள்விக்கப்பட்டது