பக்கம்:வைணவ உரைவளம்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 549 ஆப்பான் திருவழுந்துணர் அரையர் இவர் பட்டர்காலத்து வைணவர். திருவாய்மொழி விணணப்பம் செய்யும் தம் பிரான்மார்களில் ஒருவர் (பாசுரம்-169, 176, 227காண்க) ஆமருவி கிரைமேய்த்தான் கம்பியார் : கூரத்தாழ்வான் காலத்தவர். நூறுவயது நிரம்பிய பெரியார். (பாசுரம்-172 காண்க). ஆய்ச்சி மகன் : எம்பெருமானார் காலத்து வைணவர். அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர். இவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பட்டர் இவரைப் பார்க்கச் சென்ற நிகழ்ச்சி நினைவுகூரத் தக்கது (பாசுரம்162 காண்க.) ஆலவாயுடையான்: பட்டர் காலத்துத் தமிழ்ப் புலவன். பட்டரிடம் புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்’ என்ற தொடருக்கு விளக்கம் பெற்றவன் (பாசுரம்-54 காண்க). ஆழ்வான் : கூரத்தாழ்வான் காண்க. ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் : பெரிய நம்பிக்குப் பின்னவர். ஆளவந்தாரின் திருமகனார் . இவருக்கு ஆளவந்தாழ்வார் எனவும் திருநாமம் உண்டு (பாசுரம்-171, 198, 230. காண்க). ஆளவந்தார் . யாமுனாசாரியர் என்ற திருப்பெயரினர். மணக்கால் நம்பிக்குப் பின்வந்த ஆசாரியர். ஈசுவரமுனி களின் குமாரர்; நாதமுனிகளின் பேரர். மகாபாஷ்ய பட்டரிடம் சாத்திரப் பயிற்சி பெற்றவர். மகாபாஷ்யப் பட்டருக்குப் பதிலாக இவர் தண்டிகையிற் சென்று ஆக்கியாழ்வானை வாதில் வென்றவர்; அரசமாதேவி திருவரங்கத்தம்மையாரால் என்னையான வந்தார்’ என்று புகழப்பெற்று அன்றுமுதல் ஆளவந்தார்’ என்று புதிய திரு நாமத்தால் திகழ்ந்தவர். அரசன் வென்றவனுக்குப் பாதி இராச்சியமும் தோற்றவர்க்குப் பணி செய்தலும் எனக் கூறிப் பந்தயத்தில் இராச்சியத்தை மாத்திரம் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/571&oldid=921404" இலிருந்து மீள்விக்கப்பட்டது