பக்கம்:வைணவ உரைவளம்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 வைணவ உரைவளம் பணிசெய்தலை விலக்கிக் கொண்டவர். இல்லற. வாழ்க்கையை ஏற்று சொட்டை கம்பிகள், திருவரங்கம் பெருமாளரையர் முதலிய குமாரர்களைப் பெற்று இன்புற் றிருந்தவர். மணக்கால் நம்பிகளிடம் இரகசியங்கள் உபதேசம் பெற்று நாளுக்குநாள் சம்சாரத்தில் வெறுப் புற்றவர். நம்பிகள் பெரிய பெருமாளிடம் அவரை இட்டுச் சென்று இதுதான் நும் பிதாமகர் தேடிவைத்த மாநிதி" எனக்காட்ட, அன்றுமுதல் தம் குமாரர்களையும் நம்பிகளின் திருவடிகளிவிட்டுத் ஆச்ரயிக்கச் செய்து ஆத்ம சமர்ப்பணம் செய்து சதுசுலோகி என்ற வடமொழி நூலை அருளிச்செய்து துரியாச்சிரமத்தைக் கைக்கொண்டவர். இவர்தம் சீடர்கள் பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பேரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான், மாறனேர் நம்பி, திருவரங்கத் தம்மை, திருக்கச்சி நம்பி முதலியோர். ஆகமப் பிரமாண்யம்’ புருஷநிர்ணயம்' 'ஆத்மசித்தி" "தோர்த்த சங்கிரகம்’ பூரீதோத்திரம் சேது சுலோகி" முதலிய வடமொழி நூல்கள் இவர் அருளிச்செய்தவை. இராமாநுசரின் மானச ஆசாரியர். (பாசுரம்-48, 132, 191, 219, 244 காண்க). இருகை மதவாரணம் : பட்டர் காலத்தவன். நம் பெருமாளிடத்தில் பரமபக்தி வாய்ந்த ஒரு கைக்கோளன் பரம வைணவன். (பாசுரம்-235 காண்க). இளையாழ்வார்; எம்பெருமானார் காண்க. இளையாழ்வான் : பட்டர் காலத்து வைணவன் (பாசுரம் 205 காண்க). இளையாற்றுக்குடி, கம்பி : பரமபக்தர். திருநாட்கள் தோறும் கோயிலுக்கு வந்து பெருமாளைச் சேவித்துப் போவாராம். திரும்பவும் திருநாள் வருந்துணையும் அதனையே போதுபோக்காக நினைத்துக் கொண்டிருப் பாராம். மேலும் விவரம் பாசுரம்-220 இல்காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/572&oldid=921405" இலிருந்து மீள்விக்கப்பட்டது