பக்கம்:வைணவ உரைவளம்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 வைணவ உரைவளம் லட்சணத்திற்கும் ஆசார்ய லட்சணத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டாவார்' என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் (பாசுரம்-22, 65, 145, 154, 159, 225 காண்க). கோயிலாத்தான் : பட்டர் காலத்து வைணவர்; பட்டரையே தெய்வ மென்று நினைத்திருந்தவர்: தமக்குப் பிறந்த பிள்ளைக்குப் பட்டர்" என்றே பெயரிட்டவர். அந்தப் பிள்ளை தெய்வாதீனமாகத் திருநாட்டுக் கெழுந்: தருள, ஆத்தான் பட்டர் பக்கலிலே வந்து கதறியழ, பட்டரும் நீ நம்முடைய திருப்பெயரிட்ட பிள்ளை போனான்’ என்றன்றோ துக்கப்படுகின்றாய்; அதற்குத் துக்கப்படவேண்டா; அந்தத் திருப் பெயரையுடைய நாம் இருக்கத் வக்கப்படுவானேன்?" என்று அருளிச் செய்தார். (பாசுரம்-233 காண்க). கோவிந்தசாமி : இவன் ஓர் அந்தணன். கண்ணன் செய்த சிறு குறும்புகளையும் குரவைக் கோத்தல் முதலிய வைகளையும் நேரில் கண்டு களிக்கக் கருத்துடையவனாய். எம்பெருமானை வேண்ட, அவனும் அப்படியே காட்டிக் கொடுத்தான்...மேல் விவரங்களைப் பாசுரம்-60-இல் காண்க. இந்த இதிகாசம் எந்தப் புராணங்களிலும் காணப் படாதது . கோவிந்தர் : எம்பார் காண்க (பாசுரம்-126 காண்க). கோவிந்த பட்டர் : எம்பார் காண்க. கோளரி யாழ்வான் : பட்டர் காலத்தில் திருக்கோட்டி யூரில் வாழ்ந்த ஒரு வைணவர். புறச் சின்னங்களுக்கும், புறச் செயல்கட்கும், சடங்குகட்கும் மதிப்பு தருபவர். (பாசுரம்-116 காண்க). சிறியாத்தான் : பட்டர் காலத்து வைணவர். இவர் பட்டருடைய அருளிச் செயல்களைக் கேட்க விரும்பி அவர் சந்நிதியிலே விடை கொண்டு சக்கரவர்த்தித் திருமகனுக்கு எல்லா ஏற்றமிருந்தும் அன்பர்கட்காகக் கழுத்திலே ஓலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/576&oldid=921409" இலிருந்து மீள்விக்கப்பட்டது