பக்கம்:வைணவ உரைவளம்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 555, கட்டித் தூதுபோன ஏற்றமில்லையே' என்று கேட்க: அதற்கு அவர், "கடித்திரிய குலத்தில் பிறந்தால் துதுபோ' என்று சொல்ல ஒருவருக்கும் நா எழாதிறே" என்று அருளிச் செய்தாராம் (பாசுரம்-28 காண்க). சிற்றாட் கொண்டான் : திருவரங்கத்தில் வாழ்ந்த ஒரு வைணவர். பகல் பத்து-இராப் பத்து திருநாளில் அரையர் "மழுங்காத வைந்துதிய" (திருவாய். 3.1:9) என் ற. பாசுரத்தைச் சேவியா நின்ற அரையர், உன் சுடர்ச் சோதி மறையாதே' என்ற அளவில் வந்த போது இவர் மறையும், மறையும் என்றாராம் (பாசுரம்-137 காண்க). சீராமப் பிள்ளை 1 பட்டருக்குத் திருத்தம்பியார்; கூரத் தாழ்வானின் இரண்டாவது பிள்ளை. (பாசுரம்-175, 193, 203 காண்க). சொட்டை நம்பிகள் : ஆளவந்தாரின் திருக்குமாரர்; "என்னாச்சான்’ என்பவருக்குத் தமப்பனார். 74 சிம்மாச னாதிபதிகளுள் ஒருவர்; திருவாய்மொழிக்கு மனத்தா லும் வாயாலும்' என்ற தனியனை அருளிச் செய்தவர். திருக்கண்ணபுர சுவாமி : திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்த ஒரு வைணவப் பெரியார். ஆழ்வான் அருளிய சுந்தர பாஹ-ஸ்தவத்திலுள்ள ஒரு சுலோகத்தை அடிப்படை யாகக் கொண்டு சிலம்பாறு’ என்பதற்கு ரலோக் தியாக ஒரு பொருள் கூறுவர். (சின்னரப் பெண்மணிகள் திருமாலிருஞ் சோலைத் தாழ்வரையில் வந்து நம்மாழ் வாரது திருவாய் மொழிப் பாசுரங்களை இசையோடு பாட (பெரி. திரு. 9.8:9):மரங்களும் இரங்கும் வகை மணிவண்ண வோ (திருவாய். 6.5:9) என்று கூவின. அவ்வாழ்வாரது பாசுரங்களைக் கேட்ட குன்றும் உருகிப் போகா நின்றது) என்று அருளிச் செய்தமையால் குன்றே உருகி ஆறாயிற்று என்ற காரணங் கொண்டு சிலம்பாறு" என்னலாயிற்று " என்றருளிச் செய்தார் (பாசுரம்-91 காண்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/577&oldid=921410" இலிருந்து மீள்விக்கப்பட்டது