பக்கம்:வைணவ உரைவளம்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 557 யாழ்வானுடன் நட்பு கொண்ட தெற்காழ்வான் வேறு. (பாசுரம்-116 காண்க). நஞ்சீயர் : இவர் பிறப்பிடம் திருநாராயணபுரம். இவர் வேதாந்தி என்று பெயர் கொண்ட அத்வைதி. பட்டரிடம் வேதாந்த விஷயம்பற்றி வாதிட்டுத் தோற்றவர். பின்னர் பட்டரின் திருவடி சம்பந்தம் பெற்றுச் சீடரானார். ஒரு. நாள் பிச்சைக்கு வந்த வைணவருக்குப் பிச்சையிட மறுத்த தேவியரை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்து பெண் சாதிக்கு அளித்து குருதட்சினை கொண்டு சந்நியாசியாச் ரமத்தை அடைந்து ஆசாரியரைக் காணப் போனார். நேம் சீயர்' வந்தார் என்று பட்டர் சொல்ல, அன்றிருந்து இவருக்கு நஞ்சீயர்' எனப் பெயர் உண்டாயிற்று. பூரீரங்க நாதர் என்பது இவருக்குத் தாஸ்யத் திருநாமம். திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானம் செய்தருளினவர். இதைத் தவிர, திருப்பாவை ஈராயிரப் படி", திருவந்தாதிகள்', 'கண்ணிநுண் சிறுத்தாம்பு. *திருப்பல்லாண்டு இவற்றிற்கு உரை கண்டவர் (பாசுரம்7, 24, 27, 36, 46, 47, 61, 97, 109, 121, 125, 130, 144, 148, 150, 152, 156, 166, 173, 183, 189, 200, 213, 243, 253 காண்க). நம்பிள்ளை நம்பூரில் திருவவதரித்தவர். வரதராசர் என்பது இவரது இயற்பெயர். நஞ்சீயரால் கம்பிள்ளை' எனப் பெயர் பெற்றவர். இவருக்கு வழங்கிய வேறு பெயர் கள் கலிவைரி, திருக்கலி கன்றிதாசர், லோகாசாரியார், ரீ சூக்திசாகரர் என்பவை. வடக்குத் திருவீதி பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை ஆகிய இருவரும் இவருடைய சீடர்கள். திருவாய்மொழிக்கு முப்பத்தாறாயிரப்படி: என்னும் வியாக்கியானத்தை அருளிச் செய்தவர். திருவாய், மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி என்னும் வியாக்கி: யானம் வரையுமாறு பெரியவாச்சான் பிள்ளைக்குக் கட்டளையிட்டவர். (பாசுரம்-7, 41, 97, 114, 115, 120, 150, 176, 200 காண்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/579&oldid=921412" இலிருந்து மீள்விக்கப்பட்டது