பக்கம்:வைணவ உரைவளம்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 வைணவ உரைவளம் நம்பி சேகாபதி தாசர் : ஒரு வைணவப் பெரியார். திருமலைக்குப் போகும் வழியில் நிகழ்ந்த நிகழ்ச்சியை ஞானிகட்கு எல்லாம் பரம் பொருள் மயமாகத் தோன்றும் என்று இவர்சுறியதை ஐதிகமாகக் காட்டுவர்ஈட்டாசிரியர் (பாசுரம்-188 காண்க). நம்பி திருவழுதி காடு தாசர் : இவர் ஒரு வைணவப் பெரியார். இவர் திருநாட்டிற்கெழுந்தருளுகின்ற சமயத் தில் தம் பூரீபாதத்திலே சேவித்திருந்த ஒரு வைணவர் அழ, அதற்கு நம்பி கெடுவாய்! செத்துப் போகின்ற நான் போகா நின்றேன். பராசர பட்டர் வாசிக்கக் கேட்டிருக் கின்ற நீயோ அழுகின்றாய்?' என்று அருளிச் செய்தார். (பாசுரம்-122, 218 காண்க). கல்லார்: இவர் ஒருவைணவப் பெரியார். இவரும் நம்பி சேநாபதி தாசரும் திருமலைக்கு எழுந்தருளின நிகழ்ச் சியை நம்பிபற்றிய வரலாற்றில் காண்க. (பாசுரம்-188 காண்க) கல்லான் : பட்டர் திருவடிகளைப் பணிந்து வாழ்ந் தவர் (பாசுரம்-179 காண்க). நாலூரான்: கூரத்தாழ்வானின் சீடன். சோழமன்னனின் அமைச்சர் குழுவில் ஒருவன். சோழ அரசனுக்கு துர்ப் போதனை செய்து வந்தவன். இந்த அரசன் தன் வழிபடு கடவுளாகிய சிவனுக்குமேல் ஒன்றுமில்லை என்று பண்டிதர்களிடம் கையெழுத்து வாங்கித் தானும் தன் கொள்கைக்குப் பாதுகாப்பாக ஒரு கோட்டை கட்ட விரும் பினான்...எம்பெருமானார், கூரத்தாழ்வான் தொடக்க மான மகாவித்துவான்கள் உபயவேதாந்தங்களில் வல்லவர் களாகையாலே, அவர்கள் கையெழுத்தை வாங்கினிராகில் இது நிலைபெறும் என்று தன் அரசனிடம் நாலூரான் தெரிவித்ததாகக் கூறுகிறது ஒரு குரு பரம்பரை வரலாறு. (பி.ஆர். இராமாநுசர்-பக் 203-204) பாசுரம்-13 கத்திர பந்து வரலாறு கூறுமிடத்தில் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/580&oldid=921414" இலிருந்து மீள்விக்கப்பட்டது