பக்கம்:வைணவ உரைவளம்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 559 கிலாத்துக்குறிப் பகவர் : பட்டர் காலத்து வைணவர் களில் ஒருவர். பூரீவைகுண்டத்தில் எம்பெருமான் நாற் றோளனாக இருக்கும் இருப்பைக் கேட்டு அறிந்தவர் (பாசுரம்-149 காண்க) பட்டர் : பாாசரபட்டர். இங்ங்ணம் சுருக்கமாக வழங்கப் பெறுவர். பரகால சுவாமி : திருவாய்மொழிக்குப் பதினெண்ணா யிரப்படி என்னும் வியாக்கியானம் அருளிச் செய்தவர் (பாசுரம்-27 காண்க). பராசர பட்டர் : உரைகளிலே பட்டர் என்றே சுருக்க மாக வழங்கப்பெறுபவர். திருத்தமப்பவனார் கூரத்தாழ் வான். சகோதரர் சீராமப்பிள்ளை. நம்பெருமாள் வரப்பிர சாதத்தினாலே திருவவதரித்த இவருக்குப் பராசரபட்டர் வேதவியாச பட்டர் என்றும் திருநாமம் சாத்தினார் எம் பெருமானார். கூர்மையான அறிவுடைய இவரைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உரையில் வருகின்றன. எம்பெரு மானார் கட்டளைப்படி விஷ்ணு சகஸ்ர நாமத்திற்குப் பேருரை வகுத்த பெருமகனார். திருநெடுந்தாண்டகத் தில் மைவண்ண நறுங்குஞ்சி' (21) என்ற பாசு.ாத்திற்கு இவர் அருளிய வியக்கியானம், தனிப்பெருஞ் சிறப்புடையது. (பாசுரம்-24, 27, 28, 34, 36, 48, 54, 61, 66, 69, 88, 110, 114, 115, 116, 117, 118, 121, 123, 125, 129, 139, 141, 148, 149, 153, 162, 168, 175, 176, 179, 186, 195, 206, 215, 225 229, 231, 233; 233, 243, 246, 232 காண்க). பரிஞை அப்பர் : பட்டர் காலத்து வைணவர். பரிஞை என்ற ஊரினர் (பாசுரம்-245 காண்க). பாலிகை வாளிப் பிள்ளை : நஞ்சீயர் காலத்திலிருந்த ஒரு வைணவர் (பாசுரம்-150 காண்க). பிள்ளை அகளங்க பிரம்மராயர்: அகளங்க பிரம்மராயன் காண்க (பாசுரம்-235 காண்க).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/581&oldid=921415" இலிருந்து மீள்விக்கப்பட்டது