பக்கம்:வைணவ உரைவளம்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 வைணவ உரைவளம் பயன்படுத்தினார். இதைக் கண்டு உடையவர் காரணம் வினவினார். தேவதாந்தரம் சம்பந்தப்படாமல் மிளகைச் சேர்த்ததாகவிடை யிறுத்தார் மிளகாழ்வான். இலிங்கமும் அம்மிக் குழவியும் ஒரு பொருளாக நினைத்த இவருடைய பக்திக்கு வியத்தார் உடையவர் (பாசுரம்-144, 149 காண்க). முதலியாண்டான் : காஞ்சி மாநகரில் பச்சை வண்ணப் பெருமாள் கோயில் என்கிற புருஷமங்கலத்தில் பிறந்தவர். உடையவரின் சகோதரி புத்திரர். உடையவரின் திருவடி களை ஆச்ரயித்தவர். தாசரதி, வாதுலதேசிகன், ரீ வைணவதாசன், இராமாநுச பாதுகை என்பன இவரது வேறு பெயர்கள். இவர் குமாரர் கந்தாடையாண்டான் (பாசுரம்-134, 232 காண்க). வங்கிபுரத்து கம்பி : உடையவரின் பூரீபாதங்களை ஆச்ரயித்தவர். உடையவர் இவருக்குத் திருவாராதனக் கிரமம் உபதேசிக்கவில்லையே என்று வருந்தினதாக வரலாறு (பாசுரம்-63 காண்க). விர பிள்ளை : நஞ்சீயர் காலத்திலிருந்த வைணவர். இவரும் பாலிகை வாளிப் பிள்ளை என்ற வைணவரும் தேசாந்தரம் போனவிடத்து வெறுப்புண்டாகி ஒருவரோ டொருவர் பேசாதிருக்க, நஞ்சீயர் தலையீட்டால் வெறுப்பு நீங்கப்பெற்று நண்பர்களாயினர் (பாசுரம்-150 காண்க). வேதாந்த தேசிகர்: காஞ்சியில் திருத்தண்கா என்னும் விளக்கொளிப் பெருமாள் சந்நிதிக்கருகிலுள்ள துரப்பில் என்ற திவ்வியத் திருத்தலத்தில் அவதரித்தவர். இதனால் துப்பில் பிள்ளை என்று வழங்கப்பெற்றார். அப் பிள்ளா ருடைய உடன் பிறந்தாளுடைய குமாரர். இவருடைய பிள்ளைத் திருநாமம் வேங்கடநாதன் என்பது. நடாது.ாரம் மாள் என்பாரின் கடைக்கண் நோக்குக்கு இலக்கானவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/584&oldid=921418" இலிருந்து மீள்விக்கப்பட்டது