பக்கம்:வைணவ உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வைணவ உரைவளம் என்றும், பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு, ஓடிவந்து, என் மனக்கடலில், வாழவல்ல மாயமணாளா நம்பி" என்றும் இவ்வாழ்வாரே சொல் கொள்ளும்படியாக எம்பெருமான் குடும்பத்துடள் வந்து கோயில் கொண் டெழுந்தருளிய ஏற்றம் இவ்வாழ்வார் திருவுள்ளத்திற்கே தனிச் சிறப்புடையதாகும். கோயில் கொண்ட கோவலன் : (பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.) :திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் இவர் மனத்திலிருக்கின்றகிருஷ்ணன் தான் பிறந்தபடியையும் வளர்ந்தபடியையும் இவரைக் கொண்டு கேட்டான்' என்பது அநுபவிக்கத் தக்க உரை யாகும். ஈற்றடியில் ஓர் ஐதிகம்: ஒரு சமயம் எம்பெருமானார் (இராமாநுசர்) திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின் காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசியரிடம் வந்து சாயை போலப் பாட வல்லார்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யுமாறு வேண்டினர். அவரும், எம்பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச் சொல்லுவோம் என்றால், அவர் அருகில் இல்லை. ஆகிலும் இப்போதே உங்கட்குச் சொல்லி யாக வேண்டும்' என்று எம்பெருமானாரின் திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடி மீது வைத்துக்கொண்டு *இப்போது உடையவர் எனக்கு அருளிச் செய்தார்; சொல்லுகின்றேன், கேளுங்கள் என்று அருளிச் செய்தன ராம். தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு 8. Goig. 5 4:9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/59&oldid=921424" இலிருந்து மீள்விக்கப்பட்டது