பக்கம்:வைணவ உரைவளம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி . . . 69-அகவையைத் தொடங்கும் இந்த நூலாசிரியர் பி. எஸ்.சி., எல்.டி., வித்துவான், பி.ஏ., எம். ஏ., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராகவும் (1941-1950), பத்து ஆண்டு கள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர்ப் பயிர்ச்சிக் கல்லூரியில் த மி ழ் ப் பேராசிரியராகவும், பதினேழு ஆண்டுகள் திரு i - نیسانس வேங்கடவன் பல்கலைக் கழகத் பிறப்பு : 7-9:1917 தில் தமிழ்த்துறைத் தலைவ ர க வு ம் பேராசியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978-இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி - 1979 ஜூன்) கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளி யிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம் (5), இலக்கியம் (11), சமயம் (13) திறனாய்வு (10), அறிவியல் (14), ஆராய்ச்சி (4), வாழ்கை வரலாறு, தன் வரலாறு (14)-என்று 71. நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும் சமயநூல்களில் மூன்றும் திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும், அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும்-ஆக ஏழு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல் களின் தனிச் சிறப்புகளாகும். Wrapper Printed at : Eskay Art Printers, Madras-5. Designed by : Thiru P. N. Anandan

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/595&oldid=921430" இலிருந்து மீள்விக்கப்பட்டது