பக்கம்:வைணவ உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 35 திறந்த பெண்மணி இராமாநுசரின் திருக் கண்களுக்கு அந்தப் பாசுரத்தில் வரும் நப்பின்னைப் பிராட்டியாகவே இலக்காயினாள். "மலரடி பெயர்த்து வந்து, மெல் விரல்கள் சிவப் பெய்தத் தாள் திறக்கின்றாள் நப்பின்னை!' என்ற ஆனந்தக் காட்சிக்கு இராமாநுசர் உள்ளம் திறை கொடுத்தது; அந்த வாசலில் தம் பொன்னொத்த மேனி புழுதிபடியத் தொண்டனிட்டார் அவளை நப்பின்னைப் பிராட்டியாகவே கருதி. இந் நிலையில் அத்துழாய் பரபரப் புடன் ஒடி நம்பிகளிடம் ஜீயர் என்னைக் கணடதும் மூர்ச் சித்து விழுந்தார்' என்று தெரிவித்தாள். உடனே நம்பிகள் :உந்து மதகளிறு அதுசந்தமாயிருக்கும்' என்றார். பிறகு வாசலுக்கு வந்து எம்பெருமானாரைக் கண்டு, வாரும் திருப்பாவை ஜீயரே, நானும் ஓதி உணர்ந்திருக்கின்றேன், இப் பாசுரத்தை; ஆனால் உம்மைப்போல் அநுபவித்ததே இல்லை' என்று இவர் பக்தியைப் பாராட்டினார். ஆண்டாள் தம் கால எல்லையை மானசீகத்தால் கடந்து கண்ணன் அவதரித்த காலத்துக்குச் சென்று தம்மைக் கோபியருள்.ஒருத்தியாகக் கருதிக்கிருஷ்ணாதுபவம் பெறுகின்றாள். இராமாநுசரும் ஆண்டாள் பாசுரத்தை ஓதி உளங் கரைந்து அதே அநுபவத்தைப் பெறுகின்றார். இதை உளவியலார் ஒட்ட உணர்தல் (Empathetic Feeling) என்று கூறுவர். இங்கு ஆண்டாளும் இராமாநுசரும் கோபியருள் ஒருத்தியாகவே ஆய்விடுகின்றனர். இருவரும் கோபியின் உணர்ச்சியைப் பெரிதும் பெறுகின்றனர். 7 நாச்சியார் திருமொழி எத்திசை யும்.அமரர் பணிந் தேத்தும் இருடிகே சன்வலி செய்ய முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலையு மழகழிங் தேன்கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/62&oldid=921435" இலிருந்து மீள்விக்கப்பட்டது