பக்கம்:வைணவ உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வைணவ உரைவளம் மானசத் தந்தி உண்மையான செய்தியை மனத்திற்கு எட்ட வைத்துக் கொண்டிருப்பதனால் அதன் காரணமாக உயிர் போகாமல் தரித்து நிற்கும். பிராட்டியும் இத்தகைய உத்தம நாயகியாதலால் இராவணன் மாயத் தலையைக் காட்டி எவ்வளவு வஞ்சித்த போதிலும், உண்மையில் இராமனுக்கு யாதொரு தீங்கும் நேரிடாமல் இருந்தமை யால் அந்த அரக்கனுடைய மாயச் சொல் பயன்படாமல் அவளுடைய மனசாட்சியமே வீறுபெற உயிர்தரித்து நின்றது; ஆதலின் பிராட்டி உயிர்தரித்திருப்பது பெருமாள் உயிர் தரித்திருப்பதற்குக் காரணம் என்று கொள்ளிர்' என்று மறுமொழி பகர்ந்தார். (2) நஞ்சீயரிடம் திவ்வியப் பிரபந்தங்களின் சிறப்பான பொருள்களைக் கேட்ட முதலிகளில் பெற்றி என்ற ஒரு பெரியார் உண்டு. அவர் திருவாய்மொழியின் சிறப்புப் பொருள்களைப் பல தடவைகள் கேட்டிருந்தாலும் நாச்சி யார் திருமொழிக்கு மட்டிலும் நஞ்சீயரிடம் பொருள் கேட்க வாய்ப்புப் பெற்றிலர். இவர் ஒரு சமயம் திருவணை யாத்திரையாகக் கிழக்கே எழுந்தருளினபோது சில பக்தர் கள் இவரை யண்மி சுவாமி, தலையலாற் கைம்மாறிலேனே! என்ற விடத்துக் கருத்து விளங்கவில்லை, சுவாமி சாதிக்க வேணும்' என்று வேண்டினர். அவரும், குயிலே! எம்பெருமான் இங்கு வரும்படி நீ கூவவில்லையாகில் அதற்குப் பதில் உதவியாக என் தலையை (அறுத்து) உனக்குத் தந்திடுவேன் என்கிறாள்' என்று பொருள் கூறி விட்டார். ஆனாலும் இதற்குப் பொருள் இவ்வளவே இராது; நஞ்சீயர் சாதிப்பது என்னவென்று தெரிந்து கொள்ள வேணும்' என்ற அவா அவருக்கு இருந்தது. யாத்திரை முடிந்து கோயிலுக்கு (திருவரங்கத்திற்கு) எழுந்தருளினபிறகு நம்பிள்ளையைச் சந்தித்தபோது, கசுவாமி, அடியேன் சீயர் சந்நிதியிலே திருவாய் மொழிக்குப் பதினொரு முறை பொருள் கேட்டேன்; நாச்சி யார் திருமொழிக்குக் கேட்கப் பெற்றிலேன்; தலையலாற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/65&oldid=921438" இலிருந்து மீள்விக்கப்பட்டது