பக்கம்:வைணவ உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வைணவ உரைவளம் அக்கார வடி சில்சொன்னேன்; ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!' [நாறு-மணம் கமழ்கின்ற; பொழில்-சோலை: வாய்நேர்ந்து -வாயாலே சொல்லி, பராவி வைத்தல்-சமர்ப்பித்தல்; அக்கார அடிசில்சருக்கரைச் சோறு.) இப்பாசுரம் ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியிலுள்ளது. திருமாலிருஞ் சோலைப் பிரானை வழிபடுவதாக அமைந்தது. மணம் கமழா நின்ற சோலைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ் சோலை மலை யில் எழுந்தருளியிருக்கும் எம்பிரானுக்கு அடியேன் நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் வாசிக கைங்கரிய ரூபமாகச் சமர்ப்பிக் கின்றேன்; இவற்றை அவ்வெம் பெருமான் திருவுள்ளம் பற்றுவானா?' என்கின்றாள். இப்பாசுரத்தைப் பற்றி ஓர் இதிகாசம் உண்டு : எம்பெரு மானார் நாச்சியார் திருமொழி காலட்சேபம் நடத்தும் பொழுது இப்பாசுரம் அளவில் வருங்கால ஆண்டாளுடைய எண்ணம் வாய்ச்சொல்லளவில் சென்றதே யொழிய, செயற்படவில்லை. அதனை நாம் தலைக்கட்ட வேண்டும்’ என்று கருதி அப்பொழுதே புறப்பட்டுத் திருமாலிருஞ் சோலை மலைக்கு எழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளினார் என்றும், அதன் பின்னர் அப்படியே சீவில்லிபுத்துTர் எழுந்தருளி ஆண் டாளை அடிவணங்கி நின்றார் என்றும், அபபிராட்டியும் தன் நினைவறிந்து இவர் நிறைவேற்றிய செயலுக்கு மனமுவந்து நம் அண்ணரே!” என்று சொல்லி அர்ச்சாவ 14. நாச். திரு. 9:6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/67&oldid=921440" இலிருந்து மீள்விக்கப்பட்டது