பக்கம்:வைணவ உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 4 1 தார சமாதி கடந்து ஏழடி முன் நடந்து எதிர் கொண்டு அழைத்து தழுவிக் கொண்டாள் என்றும் பெரியோர் பணிப்பர். இதுபற்றியே இராமாநுசருக்குக் கோயில் அண்ணன்' என்ற திருப்பெயரும் நிலைத்து விடுகின்றது. மேலும், பெரும்பூதுர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' ' என்று ஆண்டாள் வாழ்த்தப்படுவதும் அறியத்தக்கது. இன்னுமோர் இதிகாசம் : நஞ்சீயர் சந்நிதியில் நம் பிள்ளை ஒரு பூர்ணகும்பத்துக்கும் அதிகப்படியான வற்றை விரும்பாத எம்பெருமான் விஷயத்தில் நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுமோ?’ என்று வினவ, அதற்குச் சீயர், திருவாய்ப் பாடியின் செல்வத்திற்கு இஃதெல்லாம் கூடினாலும் ஒரு பூர்ண கும்பத்திற்குப் போராது காணும்' என்று அருளிச் செய்தாராம். 9 கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் ஈர்த்திடு கின்றன என்னை வந்திட் டிருடீகே சன்பக்கல் போகேவென்று வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில் உண்ணும்போ தீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்த விலோசனத் துய்த்திடுமின்.' (கார்-கார்காலம்; தண்-குளிர்ந்த முகில்மேகம்; கமலம்-தாமரை: வந்திட்டு-எதிரே வந்துநின்று; இருடிகேசன்-கண்ணபிரான்; SMMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSAS 15. வாழித் திருநாமம்-ஆண்டாள் வாழித் திருநாமம். 36. நாச், திரு. 12:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/68&oldid=921441" இலிருந்து மீள்விக்கப்பட்டது