பக்கம்:வைணவ உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 43 அனுப்பப்பட்டவர்கள் என்று கூறி உணவு விரும்புங்கள்; பசி தீரும்’ என்று கட்டளையிட்டனுப்பினான்; அவர்களும் அங்ங்ணமே அவ்விடம் சென்று விநயத்துடன் இவ்வண்ணம் விண்ணப்பம் செய்து அடிசில் வேண்டினர். ஆயின், அந்த அந்தணர்கள் இந்த ஆயச்சிறுவர்களின் பேச்சைக் கேளா தொழியவே, இவர்கள் மீண்டும் கிருஷ்ண பலராமர்களிடம் திரும்பிச் செய்தியைக் கூறினர். கண்ணபிரான் புன்முறுவல் செய்து, பிள்ளைகாள்! அந்த அந்தணர்களின் மனைவிமார் களை அண்மி நாங்கள் இவ்விடத்திலிருப்பதாகச் சொல்லி உணவு கேளுங்கள்; அப்பெண்டிர் தவறாது அளித்திடுவர்" என்று சொல்லியனுப்பினான். அங்ங்ணமே இந்த இடைச் சிறுவர்கள் அந்தணர்களின் மனைவிமார்களை நெருங்கி, 'அம்மனையிர், இதோ கண்ணனும் நம்பி மூத்த பிரானும் அண்மையில் பசுக்களை மேய்த்துக் களைத்திருக்கின்றனர்; நாங்களும் அவர்களைச் சேர்ந்தவர்கள்; எல்லோரும் பசி தீர்ந்து மகிழும்படி அமுது படைக்க வேண்டும்' என்று வேண்டினர். அப்பெண்டிர்களும் கண்ணன் பெயரைக் கேட்டதற்கு மகிழ்ந்து தின்பன, உண்பன, நக்குவன: பருகுவன (பட்சம், போஜ்யம், லேகியம், சோஷ்யம்) என்ற நான்கு வகைப்பட்ட உணவு வகைகளையும் நல்ல பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு கண்ணன் நம்பி மூத்த பிரான் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டனர்; தாய்மார், தந்தை மார், மக்கள், உடன்பிறந்தோர், கணவன்மார்இவர்கள் எவ்வளவு தடுத்தும் அதனைப் புறக்கணித்து பக்தி நிஷ்டையை உடையவர்களைப் விரைந்து வந்து யமுனை யாற்றங்கரைச் சோலையில் கண்ணனையும் நம்பி முத்தபிரானையும் சேவித்து, கொணர்ந்த உணவு வகை களைச் சமர்ப்பித்துப் பரமானந்த பரவசர்களாய் மீண்டு சென்றனர், கண்ணபிரான் அவ்வடிசிலை அவ்வாயச் சிறுவர்கட்குத் தந்து தானும் அமுது செய்து மகிழ்ந்தான்.' 17. பாகவதம் - தசமஸ்கந்தம்-23-வது அத்தியாயத்தில் இவ்வரலாறு விரித்தோதப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/70&oldid=921444" இலிருந்து மீள்விக்கப்பட்டது