பக்கம்:வைணவ உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 வைணவ உரைவளம் சந்நிதியிற் சென்று வலம் வருதல், வணங்குதல், தோத் திரம் முதலியவற்றால் எம்பெருமானை உகப்பித்தல்; இஃது அபி கமன கால நியமம். இதற்கு அடுத்த சங்கவ காலத்தில் பகவதாரா தளத் துக்கு வேண்டிய தூய்மையான நீர், சந்தனம், மலர், தூப தீப திரவியங்கள் முதலியவற்றையும் திருமஞ்சனத்திற்கு வேண்டிய பால், தயிர், நெய், தேன் முதலியவற்றையும் அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி, பருப்பு, கறியமுது, சருக்கரை, நெய், தயிர், பழம் முதலிய உணவுப் பொருள் வகைகளையும் சம்பாதித்துத் தொகுத்துச் சித்தம் செய்தல்; இஃது உபாதான கால நியமம். மூன்றாவதான மத்தியான காலத்திலே மாத்யாஹ் திக நீராடலும், மாத்யாஹ் நிகச் சடங்கும் செய்து விதி முறை வழுவாது பகவானுக்குத் திருவாராதனம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து அங்ங்ணம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடும் பந்துமித்திரர் களோடும் புசித்தல்; இஃது இஜ்யா கால நியமம். இதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே மோட்ச நெறிக்கு உரிய வேத வேதாந்த வேதாங்கங்களையும் இதிகாச புராணங்களையும் மற்றும் உரிய நூல்களையும் தாம் கற்றலும் பிறர்க்குக் கற்பித்தலும் செய்தல்; இது சுவாத்தியாயன கால நியமம். ஈற்றதான சாயங் காலத்திலே, மாலைக் கடனாய சந்தியாவந்தனத்தைச் செய்யத் தொடங்கி பகலவன் மறைந்த பின்பு செபத்தைப் பூர்த்தி செய்து இரவு உணவுக்குப் பிறகு ஏகாந்தமாக இருந்து ஐம்பொறிகளை அடக்கி பிராணாயாமம் செய்து மனத்தைப் பரமான்மா விடம் நிலை நிறுத்தி பகவத்குணாதுசந்தனாத்தோடு பள்ளி கொள்ளுதல்; இது யோக கால நியமம். இவ்வாறு அநுட்டிக்கும் பாகவதர் பஞ்சகால பராயணர் எனப் படுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/73&oldid=921447" இலிருந்து மீள்விக்கப்பட்டது