பக்கம்:வைணவ உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 49. பேதையா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலாற் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே!" (வேதநூல்-வேத சாத்திரப் படி; பிராயம்வயது; புகு வரேனும் -வாழ்ந்திருப்பவர்களே யானாலும்; பாதி-நூறில் பாதி (ஐம்பது); உறங்கிப் போகும்-உறக்கத்தில் கழியும்; நின்ற - மிகுந்த, பதினையாண்டு-ஐம்பது ஆண்டு; அது-நெஞ்சால் நினைக்கவும் தகாத யெளவனாவஸ்தை பிறவி-பிறப்பு) தொண்டரடிப் பொடிகள் அருளிய திருமாலையிலுள்ள ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், அரிதரிது மானிடராதல் அரிது' என்பது போல மானிடப் பிறவி என்பது பல பிறவி களில் ஆயிர நற்றவங்களால் பெறக் கூடியது; அதனை வருந்திப் பெற்றாலும், கருப்பத்திலேயும், பிறந்தவுடனும், நாலு நாள் கழித்தும், சில திங்கள் கழித்தும், சில ஆண்டு கள் கழித்தும் இறக்கக் கூடியவர்கள் பெரும்பான்மையர்; திருமறையில் நூறு பிராயம் வாழ்பவன்' சதாயுர்வை புருஷ :) என்று கூறியுள்ளபடி முழு ஆயுளுடன் வாழக் கூடியவர் மிகச் சிறுபான்மையரே வினைவயத்தால் சிலர் நூறு ஆண்டு வாழப் பெற்றாலும், அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால் ஒரு நொடிப் பொழு தாவது நற்போதாகக் கழிய வழி இல்லை. பகலவன் மறைந்து மீண்டும் உதிக்குமளவும் உறக்கத்தில் (30 நாழிகை) கழியும் கணக்கில் பாதி ஆயுளாகிய ஐம்பது ஆண்டு உறக்கத்தில் கழிகின்றது; மற்ற பாதி வாழ்நாளில் சிசு நிலையில் சில காலமும், எத்தனைத் தீம்புகள் செய் தாலும் சீறவொண்ணாதபடி செல்வப் பிள்ளைப் பருவ மாய்ச் சில காலமும், பிறகு இளமைப் பருவம் வந்து விஷயாந்தரங்களில் மண்டித் திரியும் பருவமாய்ச் சில 20. திருமாலை-8 வை.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/76&oldid=921450" இலிருந்து மீள்விக்கப்பட்டது