பக்கம்:வைணவ உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹仓 வைணவ உரைவளம் காலமும், இங்ங்னம் இந்திரியச் சிறை யில் அகப்பட்டுத் தடுமாறா நிற்க, இடிவிழுந்தாற் போலே வந்து புகுகின்ற கிழத்தனமாய்ச் சில காலமும், இளமைப் பருவத்தில் செய்த எல்லை கடந்த குறும் புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சில காலமும், பசியினால் ஒன்றுந் தோன்றாத படி இடர்ப்படுவதாய்ச் சில காலமும், ஒரு பக்கத்தில் மகன் மரித்தான் என்று கேட்டு அழுவதும், மற்றொரு பக்கத்தில் மனைவி இறந்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி சம்சாரதி துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சில காலமும் கழிவதால் இத்துன்பங் களை அநுபவித்ததற்கு இன்னும் சிறிது ஆயுள் கடன் வாங்கிக் கொள்ள வேண்டியதாமேயன்றி உள்ள வாழ் நாளில் ஆன்மாவைப்பற்றிச் சிறிதாகிலும் சிந்திப்பதற்குப் பொழுது கிடைப்பதரிது; ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கின்றார். அரங்கமா நகருள்ளானே : "நித்திய விபூதியும் வேண்டா, லீலா விபூதியும் வேண்டா என்று கூறிய இரண்டு விபூதிக்கும் மேற்பட்டு மூன்றாவது விபூதி என்னும்படியான கோயிலிலே எனக்கு ஒர் இருப்பு அமைக்க லாகாதோ?' என்பது உட்கருத்து. கோயிலில் குடி வாழ்ந்தால் பேதைப் பருவத்தில் உணவூட்டுதலுக்காகிலும், சந்நிதிக்குள் கொண்டு புகுவார்கள்; பால்யாவஸ்தையில் விளையாடும்போதும் பெருமாள் புறப்பாடு அருளிப்பாடு முதலியவற்றை அதுசரிக்கும்படியாயிருக்கும்; இளமைப் பருவம் வந்தால் தான் விரும்பின விஷ யாந்திரங்களைக் காண வேண்டியாகிலும் சந்நிதிக்குள் புகலாயிருக்கும்; மூப்படைந்து உள்ளே புகமாட்டாத நாளைக்கு நம் பெருமாள் இவன் வாசலிலே வந்து நிற்றலாக இருக்கும்: ஆக இப்படிகளாலே கனவிலும் காண்பது பெருமாள் வடி வழகேயாயிருக்குமாகையாலே கோயில் வாசம் அடிக்கழஞ்சு பெற்றுச் செல்லா நிற்கும்' என்பது ஆழ்வார் திருவுள்ளம் என்பதாக ஐதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/77&oldid=921451" இலிருந்து மீள்விக்கப்பட்டது