பக்கம்:வைணவ உரைவளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x செந்தமிழ் காட்டின் இருகனாய்ப் பொலியும் சீரிய வைணவக் தனையும் கந்தலற் றோங்கும் உயர்வினைப் பெற்ற கவையறு புகழ்ச்சைவர் தனையும் சிந்தையில் ஆய்ந்து தருமிரு நூலைச் செம்மையாய் ஆய்பவர் எவரும் புக்தியில் சுப்பு ரெட்டியின் ஞானப் புலமைக்கு முதல்மதிப் பளிப்பார். 9 துங்கமார் முயற்சி வடிவமாய் என்றும் துலங்கிடும் சுப்புரெட் டியின்கை தங்கிடத் தவம்செய் எழுதுகோல் களித்துத் தாளினில் புனிதக்கூத் தியற்றின் பொங்கிய சமய தத்துவம் விளங்கும்; புனித இல் லறநெறி துலங்கும்; மங்கலில் லாமல் அணுவியல் இலங்கும்; மடமையே அச்சத்தாற் கலங்கும். 10 அருங்கலை வினோதர் இவ்வணம் பன்னூல் அளித்தனர்; அறிஞர்கள் வாழ்த்தை மருங்குறப் பெற்றுக் களித்தனர்; மேலும் மனத்தினில் வேட்கைஒங் குதலால் கருங்கலும் உருக வைணவச் செல்வர் கனிந்தருள் உரைகளுக் கிடைசேர் பெருங்கனிக் குள்ளார் சாற்றினைப் பிழிந்து பேரமு தாக்கிகன் களித்தார். 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/8&oldid=921454" இலிருந்து மீள்விக்கப்பட்டது