பக்கம்:வைணவ உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 53 லிருந்த கத்திர பந்து தன் கையிலிருந்த வில்லையும் அம்பை யும் எறிந்துவிட்டு அம்மாமுனிவரை நீரினின்றும் அகற்றித் தாமரைக் கிழங்குகளை உணவாக நல்கி அவரது விடா யைப் போக்கி அவரை மகிழ்வித்தான். முனிவர் அக்குளக்கரையின் மீதிருந்த ஒரு மரத்து நிழலில் அமர்ந்து இளைப்பாறினர். கத்திர பந்தும் அவரது கால்களைப் பிடித்து அமுக்கி நோவு தீர உபசாரங்களைப் புரிந்தான். முனிவர் அவனுடைய வரலாற்றைக் கேட்க, அவனும் தான் சூரிய மரபில் வந்த விச்வதரன் என்பவருக்கு மகனாய்ப் பிறந்தவன் என்று தொடங்கித் தன்னுடைய பாவச் செயல்களை ஒன்றும் ஒளிக்காமல் அவரிடம் உரைப் பானாயினன். இவற்றைச் செவியுற்ற முனிவரும் அவனை நல்வழிப்படுத்த எண்ணி அவனுடைய தீச்செயல்களை விட்டொழித்து ஆருயிர்களிடம் அன்பு காட்டுமாறு பணித் தார். இவனும் தான் தீய குணங்கட்குப் பிறப்பிடமானவன் என்றும், இது தவிர வேறு நியமனம் பணிக்கப்பெற்றால் அதனைச் சிரமேற் கொள்ளக் காத்திருப்பதாகவும் கூறினான். எப்படியாவது இவனை உய்விக்கப் பேரவாக் கொண்ட முனிவரும் எப்போதும், கோவிந்த, கோவிந்த' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அஃது அவனுக்கு நன்மையைப் பயக்கும் என்று உரைத்துப் போயினர். அது முதலாகக் கத்திர பந்துவும் அத்திரு நாமத்தை இடை விடாது சொல்லிக் கொண்டு காலத்தைப் போக்கினன். சில ஆண்டுகள் கழித்து அவன் காலகதி அடைந்தான். பின் அந்தணர் குலத்தில் முற்பிறப்பு உணர்வுடன் பிறந் தான். அவனுக்குக் கொடிய சம்சாரத்தில் வெறுப்பு உண்டாயிற்று. தனக்கு இவ்வுயர் குலத்தில் பிறவி நேர்ந் ததும், முற்பிறப்பின் நினைவு ஏற்பட்டதும் முன்பு பண்ணின கோவிந்த நாமசங்கீர்த்தனத்தின் பயன் என் பதை உணர்வானாயினன். தனக்கு மேலான தன்மையை விளைவித்த அந்தக் கோவிந்தனையே ஆராதனம் செய்து தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/80&oldid=921455" இலிருந்து மீள்விக்கப்பட்டது