பக்கம்:வைணவ உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 55 இங்ங்னம் கவல்கின்றபோது முத்கலன்' என்பானது வரலாற்றையும் குறிப்பிடுகின்றார். முத்கலன் வரலாறு : முத்கலன் என்பவன் பெரும் பாவி களின் தலைவன். அவன் ஒருநாள் கோதானம் செய்யும் போது கிருஷ்ணாய' என்று சொல்லித் தானம் செய்தான். பின்னர் அவன் காலகதி அடைந்தபோது யம தூதர்கள் வந்து நெருங்கி அவனை யமனிடம் கொண்டு சென்றனர். யமன் இவனை எதிர்கொண்டு மரியாதை செய்வானா யினன். முத்கலன் யமனிடம் தன்னைப் பாராட்டுவதன் காரணத்தை வினவ, யமனும் கிருஷ்ணன் நாமத்தை ஒரு தடவை சொன்னதை நினைவூட்டினான். யமனுக்கும் முத்கலனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் நரக வாசிகளின் காதில் விழுந்தது. உடனே நரகமும் துக்காது பவ நிலமாக இருந்த நிலை மாறி ஆனந்தாதுபவ நிலமாகி விட்டது. யமன் கிருஷ்ணன்' என்ற திருநாமத்தைத் தனக்கு நன்மை செய்யும் என்று கருதி உச்சரிக்க வில்லை; முத்கலன் வேண்டுகோட் கிணங்கி உபதேசிக்கவும் இல்லை; நரகவாசிகளின் காதில் இது விழுந்து அவர்கள் உய்வுபெற வேண்டும் என்று நினைத்தும் சொல்லவில்லை. இதனைக் கேட்பவர்களும், பாவஞ் செய்வதற்குக் கவன்று அதற்குக் கழுவாயாகச் செய்து கொள்ளக் கூடிய காலத்திலும் கேட்க வில்லை. பாவத்தின் பலன்களை அநுபவிக்கும்போது கேட்டனர். அப்போதும் விருப்பத்துடன் கேட்டார்கள் அல்லர்; எதிர்பாராத விதமாகவே அத் திருநாமம் அவர்கள் செவியில் பட்டது. இப்படிப்பட்ட திருநாமம் இவ்வளவு பெருமையுடையது என்பது இவன் வரலாற்றால் தெளி வுறுத்தப் பெற்றது. வியாக்கியான சூக்தி : ஒருவனுடைய அந்திமத சமயத்திலே திருமந்திரத்தை உபதேசித்து இத்தைச் சொல் லாய்' என்ன; அவனும் ஆமாகில் சொல்லிப் பார்க் கிறேன், ஆமாகில் சொல்லிப் பார்க்கிறேன்" என்று இத்தை அநேகம் உருச்சொல்லித் திருமந்திரம்தன்னைச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/82&oldid=921457" இலிருந்து மீள்விக்கப்பட்டது