பக்கம்:வைணவ உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வைணவ உரைவளம் லாதே செத்துப் போனான்; இரண்டும் அட்சரங்கள் ஒத்திருக்கச் செய்தே' சொல்ல வொட்டிற்றில்லையே பாப பலம்' என்பதை நோக்குக. 15 இனிதிரைத் திவலை மோத எறியும்தன் பரவை மீதே தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான், கணியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள், பனியரும்பு உதிரு மாலோ என்செய்கேன் பாவி யேனே!" (திரை திவலை-அலைகளின் திவலைகள்; இனிது மோத-இனிதாக அடிக்க, எறியும்-கொந் தளிக்கின்ற; பாவை-கடல்; கிடந்து-கண் வளர்ந்தருளி, கனி-கொவ்வைக் கனி, கண்ட -சேவிக்கப் பெற்ற, பனி அரும்பு-குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள்; உதிரும்-பெருகா நிற்கும்.) இது திருமாலைப் பாசுரம். இதில், எம்பெருமானைச் சேவிக்கப்பெற்ற ஆழ்வார் கண்களினுடைய களிப்புக்குப் போக்கு வீடான ஆனந்தக் கண்ணிர் பெருகப் பெற்று * ஐயோ! இக் கண்ணிர் அரும்பரும்பாகத் துளிர்த்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது சேவிக்க வொட்டாமல் தடை செய்கின்றனவே! கைக்கு 25. ஆமாகில் சொல்லிப் பார்க்கிறேன்' என்பதும் (மெய் யெழுத்து நீக்கி) எட்டெழுத்து; திரு மந்திரமும் எட் டெழுத்து. 26. திருமாலை- 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/83&oldid=921458" இலிருந்து மீள்விக்கப்பட்டது