பக்கம்:வைணவ உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 57 எட்டினது வாய்க்கு எட்டா தொழியும்படி பெரும் பாவத்தைப் பண்ணின நான் இந்தத் துக்கத்திற்கு எங்குப் போய் முறையிட்டுக் கொள்வேன்?' என்கிறார். 'அரசு செய்யும் தாமரைக் கண்ணன்': இந்தச் சொற் போக்கால் எம்பெருமான் தனது திருக்கண்ணழகால் அனை வரையும் அகப்படுத்திக் கொள்ளுகின்றான் என்பது விளங்கும். 'கண்ணனை': பெரிய பெருமாளைச் சேவித்தால், அவதாரத்தில் பிற்பட்டவர்கட்கும் உதவுகைக்காகக் கண்ணபிரான்தான் வந்து கண் வளர்ந்தருள்கின்றான் என்று நினைக்கும்படி இருக்குமாதலால் கண்ணனை' என்கின்றார். கோவலனாய் வெண்ணெயுண்ட வாயன்... அண்டர்கோன் அணியரங்கன்' (அமல-10) என்றார் திருப்பாணாழ்வாரும். இவ்விடத்தில் பட்டர் அருளிச் செய்யும்படி: யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசு மொசுப்பெல்லாம் பெரிய பெருமாள் பக்கலில் தோற்றி யிருக்கும்; வசிட்டாதிகளாலே நன்கு பயிற்றப் பட்டவர் களாய் வளர்ந்து வடிந்த விநயமெல்லாம் தோற்றும்படி யான சக்கரவர்த்தித் திருமகனை நினைக்கும்படி இருக்கும். நம் பெருமாளைக் கண்டால்' என்று. மூலவரைப் "பெரிய பெருமாள்' என்றும், உற்சவரை ‘நம்பெருமாள்" என்றும் வழங்குவது மரபு.

  • 6

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/84&oldid=921459" இலிருந்து மீள்விக்கப்பட்டது