பக்கம்:வைணவ உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 59 ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத்திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறு தற்கு ஏற்பட வேண்டிய பின்னழகையெல்லாம் காட்டுவத னாலும், தெற்குத் திக்கு-தனது அந்தரங்க பக்தனான வீ.பீஷணாழ்வானுக்காகத் தனது திருக் கண்களை வைத்து அன்போடு நோக்குவதானாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவி யாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை." இப்படி நாற்றிசையிலுள்ளாரும் பயன்பெற வேண்டு மென்று ஒரு வியாஜம் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டதும் ஆழ்வார் பொருட்டாகவே ஆயிற்று என்ற: கருத்து மூன்றாமடியிலுள்ள 'எந்தை' என்பதனால் தோன்றும். 17 குரங்குகள் மலையைத் நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி, தரங்கர்ே அடைக்க லுற்ற சலமிலா அணிலும் போலேன், மரங்கள்போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் கெஞ்சு தன்னால் அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தேன் அடர்கின் றேனே!2" (நூக்க-புரட்டித் தள்ளிக் கொண்டு வர; குளித்து -நீரிலே மூழ்கி; தரங்கம்-அலை; அடைக்கல் 28. திருமாலை-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/86&oldid=921461" இலிருந்து மீள்விக்கப்பட்டது