பக்கம்:வைணவ உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捻0 வைணவ உரைவளம் உற்ற-துர்க்கையில் ஒருப்பட்ட, சலம்கபடம்; போலேன் - ஒத்திருக்கின்றே னில்லை; வலிய-கடினமான; அளியத்தேன்அருமந்த மனிதனான நான்; நெஞ்சு தன்னால் -பாவனையால்; ஆள் செய்யாதே-அடிமை செய்யாமல்; அயர்கின்றேன் - பாழாக்கி னேன்.) இது திருமாலையிலுள்ள ஒரு பாசுரம். வாணர வீரர் கள் மலைகளைத் தள்ளிக் கொண்டு வருங்கால் கபடமற்ற அணில்களும் நீரில் மூழ்கி உலர்ந்த மணலில் புரண்டு ஓடி உடலில் ஒட்டிக் கொண்ட மணல்களை உதறிக் கடலைத் துரர்க்கையில் பங்கு பெறுகின்றன. அந்த அணில்களைப் போலேயும் ஒத்திருக்கின்றேனில்லை. மரங்களைப்போல் கடின நெஞ்சினையுடைய யான் வஞ்சனையையே தொழி லாகக் கொண்டு அழகிய மணவாளனுக்குப் பாவணையால் கூட அடிமை செய்யாமல் மானிடப் பிறவியைப் பாழாக்கி னேனே' என்று கதறுகின்றார். இதிலுள்ள இதிகாசம் : இராமாவதாரத்தில் பெருமாள் இலங்கை நகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணைகட்ட நேர்ந்தது. அப்போது வாணர வீரர்கள் மலைகளை உருட்டிக் கொண்டு வந்து கடலைத் தூர்த்தனர். இதனைக் கண்ணுற்ற அணிற்பிள்ளைகள் இந்த வானரங்கள் தமது ஆற்றலுக் கேற்றவாறு ஏதோ காரியங்களைச் செய்யும் போது நாமும் நமது ஆற்றலுக் கேற்றவாறு இப் பெரிய காரியத்தில் ஒன்றைச் செய்வோம்' என்று தீர்மானிக் கின்றன. உடனே எல்லா அணிற் பிள்ளைகளும் கடலில் மூழ்குதல், அந்த ஈர உடம்புடன் கரைமேலுள்ள உலர்ந்த மணலில் புரள்தல், உடலில் ஒட்டிக்கொள்ளும் மணலைக் கடலில் கொண்டு உதறுதல்-என்று காரியங்களைச் செய்து சேது கட்டும் செயலுக்கு உதவி புரிந்தன. இதனை ஆழ்வார் அருளிக் செய்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/87&oldid=921462" இலிருந்து மீள்விக்கப்பட்டது