பக்கம்:வைணவ உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலனாதிபிரான் 18 அமல னாதிப்பிரான் அடியார்க் கென்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் திருக் கமல பாதம்வந் தெனகண்ணி னுள்ளன. வொக்கின்றதே." [அமலன்-பரிசுத்தன்; ஆதி-ஜகத்காரண பூதன்; பிரான்-உபகாரன்; விமலன்-சிறந்த புகழை யுடையவன்; விரை-வாசனை; பொழில்சோலைகள்; நிமலன் - ஆச்ரயிப்பார்க்கு அரியனவா யிருக்கிற குற்றமற்று, ஆச்ரித பாரதந்திரியத்தை வெளியிட்டு நிற்கு மவன்; நின்மலன் - அடியார்களின் குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்சலன் நீதிவானவன்-சேஷ சேவிமுறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாககன்) பெரிய பெருமாள் திருவடிகளில் அழகுமேல் விழுந்து தம்மைப் பரவசமாக்கியவாறு கூறுகின்றார் ஆழ்வார், இதில். அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சொற்களுக்கும் பொருள் ஒன்றே; தாத்பரிய: பேதம் மாத்திரம் கொள்ள வேண்டும். 29. அமலனாதி-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/88&oldid=921463" இலிருந்து மீள்விக்கப்பட்டது