பக்கம்:வைணவ உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வைணவ உரைவளம் எம்பெருமானது அருளைக் காட்டிலும் ஆழ்வாரின் அருளே சீரிய தென்கின்றார்.

  • அருள்கொண்டாடி அடியவர் இன்புற : கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை, நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னால் அருள் செய்தான்' என்றபடி சகல வேத வேதாங்க நூல்களையும் தந்தருளின் எம்பெருமானுடைய கிருபைக்கு மேற்பட உலகில் வேறொரு கிருபையும் உண்டோ? என்று அந்த பகவத் கிருபையிலே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர், ஆ1 ஆ!! இவ்வளவு இனிமையான திவ்வியப் பிரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈசுவரன் நமக்கு அருளவில்லை; இன்றளவும் ஈசுவரனுக்கு மேற்பட்ட கிருபாநிதி யாரும் இல்லையென்று மயங்கிக் கிடந்தோம்; போலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தை' அருளிச் செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான அருளும் இனி உலகிலுண்டோ?' என்று வியந்து மகிழ்ந் தனராம்.

ஐதிகம் : திருவாய்மொழியில் எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி' . என்றவிடத்து அருளிச் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அதுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர் களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம். எண்ணாதவற்றை எண்ணுகையாவது என்? எனில்: திருவாய்மொழி அவதரிப்ப தற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி எம்பெரு மானுடைய சொரூப குண விக்கிரக விபூதிகளையெல்லாம் 41. பெரி. திரு. 2.815 42. திருவாய். 1.5:11 48. டிெ 10.7:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/99&oldid=921475" இலிருந்து மீள்விக்கப்பட்டது