பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


ஆசிரியர்: அரிதாசர் தொண்டை நாட்டில் குன்றவர்த்தனக் கோட்டத்தில் அரிவாசபுரம், அரிகண்டபுரம் என்ற பெயர்களால் வழங்குகின்ற அரிதை என்ற ஊரில் காராளர் மரபில் பிறந்தவர்.

இந்துதவழ் பைம்பொழில்சூழ் வளமிக்க
அரிதைநகர் இறைவன் என்னும்
மந்தரபுயத்து அண்ணல் அரிதாசன்
அருள்சுரந்து வகுத்துச் செய்த
முந்தைஇரு சமயவிளக்கப் பெருநூல்
ஒருகவியை மொழிந்தோர் கற்றோர்
பைந்துளவப் பரஞ்சுடரின் அருட் பேற்றால்
இகபரமும் படைப்பர் மாதோ.

என்ற நூற்பயன் கூறும் பாடலால் இதனை அறியலாம். இவ்வூர் இப்போது நாகலாபுரம் என்று வழங்குகின்றது. சந்திரகிரி இராச்சியத்து வேதகிரி தேசத்து ஹரிவாரபுரமான நாகலாதேவி அம்மன் புரம் என்பது நாகலாபுரத்துக் கல்வெட்டு. வேதநதியாவது ஆரணி நதி (ஆரணம்-வேதம்). இவ்வூர் ஆரணியாற்றங்கரையில் உள்ளது. ஆரணியை வைத்தே ஆசிரியர் தம் நூலைத் தொடங்குகின்றார். இவ்வூரில் காராளர் மரபில் களப்பாள கோத்திரத்தில் பிறந்தவர். இவரே இதை 'அம்மாநகர் நீடு அரிவாசப் பெரும்பேர் இம்மாநிலத்தில் இம்மாநகர்க்கண்... அரிதாசன் என்றோதும் நாம களப்பாளன் (நகரப் படலம் 46) என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். காராளர் மரபு என்பதை சோழ நாட்டு நாச்சியார் கோயில் என்ற திருநறையூரில் கி.பி. 1514ல் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டானது இவருடைய தமையனாரை 'அரிகண்டபுரத்துக் காராளர் மரபினரான ஆவினி களப்பாளன் திருவேங்கடமுடையார் வடமலையண்ணகள்’ என்று கூறுவதனாலும் நன்கு அறியலாம். அரிதாசருடைய தந்தையார் திருவேங்கடமுடையார் என்று அறிகின்றோம். திருவேங்கடமுடையார் சிறந்த திருமால் பக்தர். இவர் தமது மரபில் பிறந்த பெருமாள் முதலிச்சியார் என்ற அம்மையாரை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தபோது இவருக்கு வடமலையண்ணல், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பர்

86