பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


 செயத்தம்பம் நாட்டித்திரும்பிப் பொன்னம்பலநாதனையும் சேவித்து வடக்குக் கோபுரம் கட்டி வைத்த சேவை என்று சிதம்பரசாசனம் கூறுகின்றது. இதனை அரிதாசரும் தமது நூலுள் ஒரு பாடலில் குறிப்பிடுவார்.

கிரிபோல் விளங்கிக் கிளரும்புயக்
கிருட்டின ராயர்
தரைமீது சிங்காத் திரியிற்சயத்
தம்பம் நாட்ட
வரமா தரவால் அளித்தேவட
கூவ மேவும்
கருமா மணிவண் ணனைநீடு
கருத்துள் வைப்பாம்

என்பது காண்க. கிருட்டிண தேவராயரின் தாயார் திருநாமம் நாகலாதேவி. இவர் பெயரால்தான் பின்னர் இந்த அரிகண்டபுரம் என்ற ஊர் நாகலாபுரம் என மாற்றிப் பெயர் வழங்கலாயிற்று.

அரிதாசருடைய முன்னோர் புலமை மிக்கவர்கள். ஆற்றுவான்பாடி என்ற கிராமத்திலிருந்தவர்கள் என்பதை இராயர் காலத்தில் சகம் 1446 (கி.பி. 1523)இல் அமைந்த சாசனம் (ஆரணித் தாலூகா, தேவிகாபுரம்) குறிப்பிடுகின்றது. செயங்கொண்ட சோழ மண்டலத்துப் பல்குன்றங்கோட்டத்து மேல்குன்ற நாடு முருகமங்கலப் பற்று இராஜகம்பீரன் மலைக்கு அடுத்த செய்யாற்று பிரிவான தேவக்காபுரம் உடையார் திருநாமக்காணியான சோளபூண்டியில் தேவக்காபுரம் பிட்சாமடத்து விசுவேசுவர சிவாச்சாரியாரும் தான மயேசுவர கைக்கோள் முதலிகளும், ஆற்றுவான்பாடி வித்துவான்களில் திருவேங்கலநாதர் மகன் வடமலையார்க்கு இறையிலி காணியாச்சி பண்ணிக் கொடுத்தபடி இத்திருவேங்கல நாதரே வடமலையாரின் தந்தை திருவேங்கடமுடையார் என்பது மு. இராகவையங்கார் குறிப்பு'. இதற்கு முந்திய ஆண்டில் (சகம் 1415) இராயர் நாகலாபுரத்தைச் சர்வமானியமாக அளித்தார் என்று ஒரு


31 சாசன தமிழ்க்கவி சரிதம் (1937) பக்149.

88