பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


 தாம் இளமையில் சிறுவர்களோடே இணங்கித் திரிந்த காலத்தில் வடிவழகியநம்பி’ என்ற குருவானவர் அன்போடு "வா, சிறு உறுதி விளம்புவோம். இது பொருள், மருள் தங்கிவிடாது உணர்தி' என்று அழைத்து உறுதி கூறினார் என்றும், இவர் வைணவ குலதுங்கர் என்றும் கூறுகிறார். மேலும், பெத்த பெருமாள் என்ற மற்றொருவர், இவ்வடிவழகிய நம்பி, பொன் மலரடி பணிந்து நங்குருவாயடைந்து மிக மனமகிழ்ந்தே உயர்ந்தோன். பெத்த பெருமாள் என்னும் செல்வன் தம்மை வரவழைத்து இரு சமய நூல்களையும் சங்கையறத் தெரிவித்த ஆசான் - என்றும் கூறுகிறார். இவ்விருவரையும் குறித்த வரலாறுகள் அறியக்கூடவில்லை.

நூல் அமைப்பு:இதுகாண்டம் என்ற பெரும் பாகுபாட்டையும் படலம் என்ற அத்தியாயப் பிரிவையும், பரிச்சேதம் என்ற உட்பிரிவையும் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பு பொதுவாகத் தமிழ்நூல்களில் இல்லை. இவர் வடமொழிநூல் அமைப்பைத் தழுவிச் செய்தார் போலும். பாயிர காண்டம், பூர்வ காண்டம், உத்தர காண்டம், வேத பரமார்த்த காண்டம் என்பன காண்டப் பாகுபாடுகள். படலங்கள் முறையே 9, 7, 46; பரிச்சேதம் பாயிர காண்டத்தில் இல்லை. மற்றவற்றுள் மொத்தம் 130. நூலுக்குப் புறம்பாகத் தொடக்கத்தில் தனியன்’ என்ற தலைப்போடு 13 பாடல்கள் உள்ளன.இவற்றுள் முதல் மூன்று பாடல்கள் அரிதாசரைத் துதிப்பவை. அடுத்த எட்டுப் பாடல்கள் நூற்பயன்கூறி நூலைப் போற்றுபவை. இறுதி இரு பாடல்களும் பழிச்சினரைப் பரவல் என்ற தலைப்பிட்டு வடிவழகிய நம்பியையும் பெத்தபெருமாள் என்பவரையும் போற்றுபவை.

பாயிர காண்டம் முழுமையுமே நூலுக்குத் தோற்றுவாயாக உள்ளது. முதல் கடவுள் வாழ்த்துப் படலம். எதிராசர், குருகூரன், சேனாதிபதி, வடகூவம், கருமாமணிவண்ணன் என்று துதி சொல்லுகிறது. வழக்கமாகச் சொல்லும் முறை திருமால் முதலாக


34 பிற்காலத்தில் வடிவழகிய நம்பிதாசர் என்ற பெயருடைய ஒருவர் இருந்து ஆழ்வார் வரலாறுகளைச் செய்யுள் வடிவில் குருபரம்பராப் பிரபாவம் என்ற பெயரில் எழுதினார். இவண் குறிப்பிட்ட வடிவழகியநம்பி அவரினும் வேறானவர்.

92