பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




ஆல மரத்தை அடக்கிய வித்தென
அண்ட மெலாம் எளிதில்
சால அடக்கி அளிப்பவ னேதிகழ்
சந்திர சேகரனே
மால்அய னுக்கும் அனந்த மறைக்கும்
நல்வான வருக்குமெலாம்
மூலம் எனத்தகு காரண னேநம
முக்கணனே நமவே.

என்பது அவற்றுள் ஒன்று.

ஆரணவல்லி, அரியே பரிபூரண நமவே என்று தானும் ஐந்து பாடல்கள் பாடுகின்றாள்.

அந்தமும் ஆதியும் ஆகிய பேர்ஒளி
ஆம்உனை மாம றையால்
முந்துணர் வோச்சிலர் அல்லது
மாறுகொள் மோகன நூல்வழிநீ
தந்த பெருஞ்சம யங்களை யேபர
தத்து வம்என் றுணர
புத்தி மயக்கிடும் அச்சுத னே,பரி
பூர ணனே நமவே.

என்பது அவற்றுள் ஒன்று.


அப்போது ஆகமவல்லி, நீ சொல்லியது புதுமையாயிருக்கிறது. எங்கள் தெய்வமே பழம் பொருள் என்று சொல்ல, இருவரும் வாதம் செய்கின்றனர். அங்குள்ள யோகியர், அந்தணர், பாகவதர், பாசுபதத்தார் ஆகிய அனைவரையும் கூட்டி அவர்கள் முன் தங்கள் வாதங்களை வைக்கின்றனர். இதுவரையில் பாயிர காண்டம், பதிகம் என்று பிற நூல்கள் சொல்லும் பகுதியை இவர் விடயத்திறப் படலம்’ என்று கூறுவார்.

ஒரியல்பைக் குறிப்பிடலாம். பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் விளிக்கும்போது அழகான தொடர்களைச்

96