ஒண்மிதியில் புனல் உருவி ஒருகால் நிற்ப,
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து, அண்ட மீது போகி,
இருவிசும்பி னூடுபோய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி,
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே[1]
பரந்தாமன் பார்த்தன் தேரை இயக்கினதுபோல் ஒவ்வொருவர் இதயகமலத்திலும் அவன் வீற்றிருந்து இவ்வுடலாகிய தேரை இயக்கிச் செயற்படுத்துகின்றான். அங்ஙனமே ஒவ்வொரு மனிதனும் செயற்படுகிறான். அந்த இயக்கத்தின் அடிப்படையில்தான் இந்நூலும் எழுகின்றது. இதில் ஐந்து முக்கியமான புராணங்கள் மட்டிலுமே விளக்கப் பெற்றுள்ளன. இவை வழக்கிலில்லாதவை. [2]
என் அரிய நண்பரும் வைணவ சீலருமான திரு. வீ.வீ.கே. சுப்புராசு அவர்கள் (அதிபர், சுரா நூல் வெளியீட்டகம்) ஒரு சமயம் வைணவ புராணங்கள் பற்றி ஒரு நூல் எழுதுமாறு பணித்தார்கள். அதை அவர் மறந்தே போனார். அந்த ’ஆணை’ என் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுக் கிடந்த அடியேனுக்கு சிறிது ஓய்வு கிடைத்தமையால் இந்நூல் எழுதத் துணிந்து அவனருளால் நிறைவு பெற்றது. பணித்த பண்பாளரும் இதனை உடனே அச்சேற்றி அடியார்களிடையே நடையாட விட்டமைக்கு என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.
ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபாடு கொண்டவரும், திருமழிசை பிரான், கலியன் பாசுரங்களில் ஆழங்கால் பட்டு ஆய்ந்து முறையே எம்ஃபில் டாக்டர் பட்டம் பெற்றவளும் என் அபிமான புத்திரியுமான
-X-