பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மு.ப. சியமளா மூலப்படியையும், பார்வைப் படிமங்களையும் ஒப்பிட்டுச் சரிபார்த்தமைக்கு என் ஆசி கலந்தநன்றி என்றும் உரியது.

இந்த நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கியவர் என் நெடுநாள் நண்பரும், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவரும், தம் வாழ்க்கையைத் தம் துணைவியுடன் வைணவத் தொண்டிற்கே அர்ப்பணித்தவரும், 'வைணவம்' என்ற திங்கள் இதழின் ஆசிரியருமான டாக்டர் ஜெ. பார்த்தசாரதியாவார். அவர் இந்த நூலுக்கு அணிந்துரை நல்கியது இந்த நூல் பெற்ற பேறு; அடியேன் பேறும்கூட அணிந்துரை அருளிய அன்பருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றுமே உரியது.

இந்த நூல் அமரர் நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கட்கு (1913-2002 அன்புப் படையலாக்கப் பெறுகின்றது. பிறந்து, (21.12.1913) ஏழு நாட்களில் அன்னையை இழந்த நிலையில் கவாமி இராமகிருஷ்ண பரமகிருஷ்ண சுவாமிஜி அவர்களால் வளர்க்கப் பெற்று கல்வி கற்பிக்கப்பெற்றமையால் அவர்தம் வாழ்க்கை ஆன்மிகம், நாட்டுப்பற்று, நடைமுறை உலக வாழ்க்கை, ஒழுக்க முறைகள் அனைத்தும் கைவரப்பெற்று சிறந்த குடிமகனாகத் திகழ வாய்ப்புகள் பெற்றுத் திகழ்ந்தார். 1939ல் சட்டப் படிப்பை முடித்து 1940ல் வக்கீல் தொழில் தொடங்கி 1950 முதல் பல்லாண்டுகள் அரசு வக்கிலாகப் பணியாற்றினார். 1958ல் முத்து இராமலிங்கத் தேவர் வழக்கையும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் கள்ள நோட்டு வழக்கையும் கையாண்ட நிகழ்ச்சிகள் பரபரப்பானவை; மக்கள் மனத்தைக் கவர்ந்தவை. இன்னொரு வழக்கு- பொய்யான அவதூறு வழக்கு - இராஜாஜியின் அருமை மகள் கைம்பெண் நாமகிரியைப் பற்றியது;"சிவப்புநாடா என்ற மஞ்சள் இதழில் வெளிவந்தது. மனம் உடைந்த இராஜாஜி வழக்கு தொடுத்து கடுமையான தண்டனை வாங்கித் தருமாறு திரு. ரெட்டியாரை வேண்டிக்கொண்டார். அதனை அவ்வாறு செய்யாமல் வேறுவிதமாகக் கையாண்டார்."இப்படி இனி தொடர்ந்து எழுதினால் விசாரணையின்றி கடுமையான தண்டனையை ஏற்க ஒப்புக் கொள்கிறேன்” என்று எழுதிய வாசகத்தின் கீழ் கையெழுத்து வாங்கினார். இப்படிச் செய்தால் நிரந்தரமாகப் பிரச்சினை எழாது என்று இராஜாஜிக்கு விளக்கினார். இதனைத் தொலைபேசியில் கேட்ட இராஜாஜி அவர்கள் அடக்க முடியாத சிரிப்பால் ரெட்டியார்

-xi-