புராண இலக்கியம்-விளக்கம்
என்று நம்மாழ்வார் அருளிச் செய்வதாலும் இப்புராணத்தின் ஆட்சி இருந்தமை நன்கு அறியலாம். மேலும், பதினெண் புராணங்களையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டுப் பாடுவதும் ஈண்டு அறியத்தக்கது.
எங்கு மாகி நின்றானும்
இயல்பறி யப்படா
மங்கை பாகம் கொண்டானும்
மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு
நான்குக் குணர்வுமாய்
அங்க மாறும் சொன்னானும்
ஐயாறுடை ஐயனே (26:6)
என்பது சம்பந்தர் தேவாரம். 'பங்கமில் பதினெட்டு’ என்பது பதினெண் புராணமாகும். நான்கு வேதம்; அங்கமாறு - வேதாங்கம் ஆறு.
காலத்தால் இன்னும் முன்னதான மணிமேகலை என்னும் நூலில் புராணக் குறிப்பு வருகிறது. 'சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை'யில் வைணவவாதியைக் குறிப்பிடும்போது காதல் கொண்டு கடல்வண்ணன் புராணம் ஒதினன்' என்று குறிப்பிடுகின்றார். இங்கு ஆசிரியர் விஷ்ணு புராணத்தைக் குறிப்பிடுகின்றார் என்பது வெளிப்படை (கடல்வண்ணன் - திருமால், விஷ்ணு,
பழங்கதையை உயர்த்திச் சொல்லி அதை சமயத்துறையில் காக்க வேண்டிய பெருமையைத் தந்தவர் சைனர். ஆதியில் இவர்கள் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்களாதலாலும், தமிழுக்குப் புறம்பான ஒரு சமயத்தையும் நாகரிகத்தையும் தமிழகத்தில் புகுத்த முற்பட்டவர்களாதலாலும் இவர்கள் இவ்வாறு தங்களுக்கென்று ஒரு பாதையை மேற்கொண்டது இயற்கையே. சீவக சிந்தாமணியே ஒரு புராணம் என்பது நினைவுகூரத்தக்கது. புராணம் என்ற பெயரோடு நாம் அறிவன புராண சாகரமும், சாந்தி புராணமும் ஆகும்.முன்னது பஃறொடை வெண்பாவாலானது (காலம் 9ஆம் நூற்றாண்டு - யாப்பருங்கல விருத்தியால் அறியப்பெறுவது). சாந்தி புராணம் சாந்தி
7