சுராவின் வைணவ புராணங்கள்
அறந்தலை மணந்த செங்கோல்
ஐவர்பால் ஏழும் காப்ப
நறுந்துழாய் பகவன் தூது
நடந்ததாட் கமலப் போது
மறந்தனர் மாக்கள் வாளா
வருபகல் கழிகின் றாரே.
கையும் நாவும் பற்றி விளக்கும் பாடல்:
இடிகுரல் யானை வெண்கோடு
இறுத்தவன் இணைப்பெற் றாளின்
கடித்துனர் புனையாக் கைகள்
கையது கைக ளாமால்;
பொடித்தசெங் கதிர்போற் காந்தி
பொழிமணிச் சூட்ட ராவின்
நடித்தவன் நாமம் பாடா
நாவழங் காத நாவே.
என்பதாகும்.
மூன்றாம் கந்தம்: இது 9 அத்தியாயங்கள் கொண்டது. விதுரனுக்கு உத்தவர் கண்ணன் சரித்திரம் கூறுதல், மைத்திரேயர் விதுரனுக்குத் தத்துவம் உரைத்தல், பிரமன் தோற்றம், காள அளவு, சனகாதியர் தோற்றம், வராக அவதாரம், தேவர் தோற்றம், கபிலர் பிறப்பு. கபிலர் தத்துவம் உரைத்தது (சாங்கிய நூல்), சுகமுனிதத்துவம் உரைத்தது (9:3), விதுரர்க்குத் தத்துவம் உரைத்தது (3:2) போன்ற அத்தியாயங்கள் தத்துவங்களின் தோற்றம், இயல்பு முதலியன கூறும் சமயப் பகுதிகளாகும்.
நான்காம் கந்தம்: இதில் 6 அத்தியாயங்கள் உள்ளன. மரீசி முதலியோர் படைப்பு, தக்கயாக சங்காரம்; தக்கயாக சங்காரத்தில் போர் வருணனையைக் காணலாம். இங்கு சிவபெருமானின் சிறப்புகள் மிகஅழகாகவும் சுவைபடவும் நுவலப்பெற்றுள்ளன. அதனுள் முருகன்