இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுராவின் வைணவ புராணங்கள்
எட்டாம் கந்தம்: இது 8 அத்தியாயங்கள் கொண்டது. மனுகசேந்திரன் பற்றிய வரலாறுகள் தொடங்குகின்றன. கசேந்திரன் வரலாற்றில் யமகம், திரிபு அமைந்த பாடல்கள் அதிகம். பாற்கடல் கடைந்தது, தேவாசுரப் போர், மோகினி உருக்காட்டியது, வைவச்சுதன், வாமனாவதார வரலாறுகள் தொடர்கின்றன. வாமனாவதாரப் பாடல்களின் யாப்பு கம்ப ராமாயணத்தில் இதே பகுதியை நினைவூட்டும். அடுத்து வருவது மச்சாவதார வரலாறு. இதில் மோகினியைப் பற்றிக் கூறியவிடத்து கனலுமிழ் கணிச்சியான் கூறியபடி புருடோத்தமன் மோகினி வடிவம் எடுப்பதை 12 பாடல்கள் விவரிக்கின்றன. மோகினியைக் கண்டு பிஞ்ஞகன் மயங்குகின்றான் என்பதையும் சுவைபட அமைக்கின்றார் ஆசிரியர். மாயோன் பிழிந்து கொள்வனைய சொல்லிப் பெண்ணுருவெடுத்து நின்றான்';
- பிறையும் வில்லுமொத் திலகிய
- திருநுதற் பேதை
- அறையும் வண்டிமிர் அணிமலர்த்
- தடஞ்சினை தோலும்
- நிறையு மாற்றரு மாதர்மீ
- தூரமுக் கண்ணன்,
- இறையும் நாணிலன்; பின்செலும்
- இருங்களி றேய்ப்ப,
- நெறிந்து நெய்கனி குழலுமை
- நகுவது நினையான்
- பொறுத்த கங்கையாள் புன்னகை
- காட்டலும் கருதான்,
- அறற்க ருங்குழல் பற்றினன்
- அங்கையாற் றழுவ,
- எறிக்கும் சேயிழை மின்னெனக்
- கைப்படா திலகும்,
இவற்றை அடுத்து வருவது கவிஞர் கூற்று: