இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுராவின் வைணவ புராணங்கள்
:'நங்காய்மண் அருந்தினன்நின் மதலை' என
- 'இல்லை'என நவின்றா னாக
- கொங்கார்ந்த செழுங்கமலக் கோற்றொடிகை
- பற்றினள்,வாய் காட்டு கென்ன,
- அங்காந்த மணிவண்ணன் அம்பவளத்
- துவர்வாயி னழகு காணும்
- செங்காந்தள் முகிழ்விரலந் தீங்கிளவி
- உலகனைத்தும் தெரியக் கண்டாள்
- விண்கண்டாள் விண்வளைக்கும் வெங்கதிருந்
- தண்கடரும் விளங்கக் கண்டாள்;
- மண்கண்டாள், மண்வளைந்த மாகடலும்
- மேருயர்மால் வரையும் கண்டாள்;
- தண்கொண்ட வெண்கோட்டுத் தவளநெடு
- வளங்கண்டாள், தளையும் கண்டாள்;
- பண்கொண்ட வண்டரற்றும் பழந்துளவோன்
- இவன்எனவே பரவி னாளால்,
- முருகொழுகு முகிழ்விரியும் மொய்துளவோன்
- மாயையினான் மறைத்த லோடும்
- பருகுவனள் போனோக்கிப் பழுத்தொழுகும்
- அன்பினளாய்ப் பராவி அன்னை
- பொருகளிறு வருக,வளர் போரேறு
- வருக,எழிற் பூவை வண்ண!
- வருகவெனத் துகரில்விளை மணிமுத்தங்
- கொண்டனள்,உண் மகிழ்வு பூத்தாள்
அற்புதமான பாடல்கள். பாலகிருட்டிணனின் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.[1]
- ↑ 4 குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி'யிலுள்ளதேவகி புலம்பல் (7)என்பதிலுள்ள பாசுரங்களை ஒப்புநோக்கி மகிழ்தல் தகும்.